Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
1989 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் “அபூர்வ சகோதரர்கள்”. இப்படத்தில் இடம் பெற்ற “புது மாப்பிள்ளைக்கு” பாடல் மிகப் பிரபலமானது.
![Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை! Behind The Song musician Ilayaraaja talks about Puthu Maappillaikku song Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/691777510324d4890e3626fa0ad1f6541716105903799572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Behind The Song வரிசையில் அபூர்வ சகோதர்கள் படத்தில் இடம் பெற்ற “புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான விதம் பற்றி காணலாம்.
1989 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் “அபூர்வ சகோதரர்கள்”. இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்திருப்பார். மேலும் கௌதமி, ரூபிணி, ஸ்ரீவித்யா, நாகேஷ், நாசர், ஜெய்சங்கர், ஜனகராஜ், ஆர்.எஸ்.சிவாஜி, மௌலி, டெல்லி கணேஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் கமல் ஒரு வேடத்தில் உயரம் குறைந்தவராக நடித்திருந்தார்.
இந்த கேரக்டரில் கமல் எப்படி நடித்தார் என்ற கேள்வி இப்போதும் புரியாத புதிராகவே உள்ளது. அந்த அளவுக்கு மிகவும் கச்சிதமாக அந்த கேரக்டரின் காட்சிகளை படமாக்கி இருப்பார்கள். இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. குறிப்பாக உயரம் குறைவான கமலுக்கு போடப்பட்ட “புது மாப்பிள்ளைக்கு” மற்றும் “உன்ன நினைச்சேன்” ஆகிய 2 பாடல்களும் ரசிகர்களால் இன்றும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
View this post on Instagram
இதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது தங்கை எஸ்.பி.ஷைலஜா இணைந்து பாடிய வாலி வரிகள் எழுதிய “புது மாப்பிள்ளை” பாடலுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையரஜா, ”அபூர்வ சகோதரர்கள் படத்துக்காக புது மாப்பிள்ளைக்கு பாடலின் சூழலை கமல்ஹாசன் சொன்னார்கள். நான் ஒரு ட்யூனை உருவாக்கினேன். ஆனால் அது அவருக்கு திருப்திகரமாக வரவில்லை. ட்யூன் நன்றாக இருக்கிறது என சொன்னார். ஆனால் நான் எதிர்பார்ப்பது அன்பே வா படத்தில் இடம்பெற்ற நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் என்ற பாடல் மாதிரி தான் என சொன்னார். அதனை பின்பற்றி புது மாப்பிள்ளை பாட்டை உருவாக்கினேன் என இளையராஜா தெரிவித்திருப்பார்.
மேலும் படிக்க: Behind The Song: வார்த்தையை சொன்ன தேவா.. வரிகளை அடுக்கிய வைரமுத்து - “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடல் உருவான கதை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)