மேலும் அறிய

Behind The Song: வார்த்தையை சொன்ன தேவா.. வரிகளை அடுக்கிய வைரமுத்து - “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடல் உருவான கதை!

கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில் பல்லவி வரை தேவா தான் எழுதியிருந்தார். சரணம் நான் எழுதினேன்.

Behind The Song வரிசையில் "குஷி” படத்தில் இடம்பெற்ற “கட்டிப்புடி..கட்டிப்புடிடா” பாடல் உருவான கதையைப் பார்க்கலாம். 

கடந்த 2000 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக், நாகேந்திர பிரசாத் என பலரின் நடிப்பில் வெளியான படம் “குஷி”. தேவா இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் குறிப்பாக விஜய், மும்தாஜ் ஆடிய “கட்டிப்புடி..கட்டிப்புடிடா”  பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 

அந்த பாடல் உருவான விதம் பற்றி பாடலாசிரியர் வைரமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததை காணலாம். அதில், “குஷி படத்துக்கு எல்லா பாட்டையும் எழுதிய நிலையில், ஒருநாள் அப்படத்தின் இசையமைப்பாளர் தேவா என்னை அழைத்தார். ஒரு கமர்ஷியல் பாடல் ஒன்று வேண்டும் என என்னிடம் கேட்டார். நான் ஏன் இதுவரை பண்ணியது கமர்ஷியல் ஆகாதா? என கிண்டலாக பதில் கூறினேன்.

என்னை பொறுத்தவரை தேவா எனக்கு பிடித்த இசையமைப்பாளர், ரொம்ப மரியாதை தெரிந்தவர். மிகவும் அன்பான ஒரு நபர். தொடர்ந்து நாங்கள் பாடல் எழுதுவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அப்போது தேவா, “நான் சும்மா இயக்குநரிடம், தயாரிப்பாளரிடமும் டம்மியாக இரண்டு வார்த்தைகள் சொன்னேன். அது அவர்களுக்கு பிடிச்சி போச்சு. நீங்க தப்பா எடுக்க மாட்டீர்கள் என்றால் அதையே நான் வைத்துக் கொள்ளலாமா?” என என்னிடம் கேட்டார். 

நான் சரி என சொல்லி விட்டேன். பாடுங்க என சொன்னதும், “கட்டிப்புடி..கட்டிப்புடிடா” என்ற வார்த்தைகளை பாடி காட்டினார். நான் சரி வரிகளை எழுதி தர்றேன் என சொல்லி விட்டு கிளம்பி விட்டேன். காரில் வரும் போது என்னுடைய உதவியாளர், “தேவா சொன்ன வரிகள் கீழே இருக்கு. நீங்க எப்படி ஓகே பண்ணீங்க?” என கேட்டார். நான் , “அதைவிட கீழே என்னால் பாடல் எழுத முடியாது” என பதில் சொன்னேன். 

கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில் பல்லவி வரை தேவா தான் எழுதியிருந்தார். நான் எழுதிய வரிகள் என்னவென்று பார்த்தால், “ஆக்சிஜன் இல்லாமல்…இமயமலை ஏறாதே… கற்பனை இல்லாமல்…கட்டில் மேல் சேராதே” என கவித்துவமாக எழுதியிருப்பேன். வாழ்க்கை என்றால் எல்லா அம்சங்களும் வேண்டியிருக்கு. கொண்டாட்டங்கள் தேவைப்படுகிறது. புனிதம் ஒருபக்கம், கொண்டாட்டம் ஒரு பக்கம் என எல்லாம் சேர்ந்த சமூகத்தில் இதற்கும் ஒரு பங்கு இருக்கிறது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் அந்த பாடல் எழுதப்பட்டது” என வைரமுத்து கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget