மேலும் அறிய

நேசமணி காமெடிக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா ? - ரிவீல் செய்த மதன் பாபு!

”நான் அந்த சீன்ல நிறைய நேரம் சிரிச்சேன். அதை முழுசா போட முடியல.”

வடிவேலு எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கலைஞன். இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்று மீம்ஸாகவும் , போஸ்டாகவும் சமூக வலைத்தளங்களில் கலக்கியது. படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நிஜத்தில் இருப்பது போலவே நெட்டிசன்கள் பேச தொடங்கினர். குறிப்பாக அவர் தலையில் சுத்தியல் விழுந்ததற்கெல்லாம் பிராத்தனை செய்தது வேற லெவல் . என்னதான் ஃபன்னாக இருந்தாலும் கூட , வடிவேலும் என்னும் கலைஞனை ரசிகர்கள் எந்த அளவிற்கு மிஸ் பண்ணுறாங்க என்பதை உணர முடிந்தது. வடிவேலும் கம் பேக் கொடுக்க இந்த நேசமணி கேரெக்டர் வைரல் ஆனதும் மிக முக்கியமான காரணம் என்றால் மிகையில்லை. இந்த நிலையில் ஃபிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற நேசமணி காமெடியில்  வடிவேலுவுடன் நடித்த மதன் பாப் . அந்த காமெடி எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.

நேசமணி காமெடிக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா ? - ரிவீல் செய்த மதன் பாபு!

”இதோ வந்துட்டேன்னு ஓடி வரும் பொழுது ராதாரவி கிடையாது. நான் வழுக்கி விழும் பொழுது  நான் மட்டும்தான் இருந்தேன். அடுத்து நான் எட்டி உதைக்கும் பொழுது என் கால் மட்டும் வேறு ஒருத்தர் மேல போய் படும். அவர் கரி டிரம்மில் போய் விழும் பொழுது  அவர் கூட உள்ளவங்க இருந்துருப்பாங்க. அதன் பிறகு  விஜய் , சூர்யா , ரமேஷ் கண்ணா சிரிக்கும் பொழுது அவங்க தனியா சிரிப்பாங்க. தேவையானி தனியா சிரிப்பாங்க. நான் தனியா சிரிப்பேன். ராதா ரவி தனியா சிரிப்பாங்க. எல்லா காட்சிகளையும் இப்படி  தனித்தனியா எடுத்துதான் ஜாயின் பண்ணாங்க. ரொம்ப பேரு சீரியஸ் சீன் எல்லாம் பயங்கரமா எடுப்பாங்க. காமெடி சீனை ரொம்ப அலட்சியம் செய்வாங்க. காமடிதானே அப்படினு. ஆனால் காமெடி சீனையும் சீரியஸா , நுணுக்கமா எடுத்தா ஹிட் ஆகும் என்பதற்கு இந்த நேசமணி காமெடி ஒரு உதாரணம் .  நேசமணிக்காக இத்தனை கோடி பேர் வேண்டிக்கொண்டதில் இருந்து அதன் வெற்றி தெரியுதில்லையா. வடிவேலு அந்த சீன்ல எண்ணையில வழுக்கி விழுந்த மாதிரியாக காட்சி இருக்கு. அப்போ அவர் கால் அடிப்பட்டுருந்துச்சு. வின்னர் படத்தில் வடிவேலு நொண்டி நடப்பது போல இருக்குமல்லவா அப்போது அவருக்கு உண்மையிலேயே காலில் அடிப்பட்டுருந்தது. மதுரையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  ஜார்லி சாப்ளின் , ஜாக்கி சான் போன்றவர்கள் காமெடியை நுணுக்கமாக எடுப்பார்கள். அதே போல இயக்குநர் சித்திக் இந்த காமெடியை ஆறு நாட்கள் எடுத்தாரு. அதுதான் அதன் வெற்றிக்கு காரணம். நான் அந்த சீன்ல நிறைய நேரம் சிரிச்சேன் . அதை முழுசா போட முடியல. ஏன்னா நீங்க சிரித்ததை வைத்தால் மற்றவர்களின் சிரிப்பு எடுபடவில்லை. அதனால் உங்களின் சிரிப்பை பாதி கட் செய்துவிட்டேன் அப்படினு கால் பண்ணி சொன்னார் சித்திக். வடிவேலு அவர்களுடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ரொம்ப ஜாலியா இருக்கும் . அசத்த போவது யாருனு நான் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தேன். அதில் வடிவேலுவை போலவே இருவர் இருப்பாங்க. அவங்க பண்ணும் காமெடியை பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு கால் செய்து , யாருண்ணே அவங்க நல்லா பண்ணுறாங்க அப்படினு பாராட்டியிருக்காரு.” என்றார் மதன் பாப்.

Also Read | DON Review: ‘டான்’.. ரியல் டானா.. இல்ல டன் டன் டனாக்கானா டானா..? - டான் படம் எப்படி இருக்கு- விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget