(Source: ECI/ABP News/ABP Majha)
DON Review: ‘டான்’.. ரியல் டானா.. இல்ல டன் டன் டனாக்கானா டானா..? - டான் படம் எப்படி இருக்கு- விமர்சனம் இதோ..!
Don Movie Review Tamil: சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘டான்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
Cibi Chakaravarthi
Sivakarthikeyan, Priyanka Mohan, SJ Suryah, Samuthirakani, Soori
சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘டான்’ (DON)
கதைக்கரு
அப்பாவின் தெளிவில்லாத கண்டிப்பினால், விருப்பமில்லாமல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் சக்கரவர்த்தி (சிவகார்த்திகேயன்) ஒரு பிரச்னையில் காலேஜில் பணிபுரியும் பூமிநாதனை காலேஜ்ஜை விட்டு வெளியேற்ற, ஒரு கட்டத்தில் காலேஜ் பிரின்ஸ்பாலாக மாறும் அவர் சக்கரவர்த்தியை டிகிரி வாங்க வைக்கக்கூடாது என்று நினைக்கிறார்.
இந்தப் பிரச்னைகளை சமாளித்துக் கொண்டிருக்கும் போதே, சிவகார்த்திகேயனுக்கு வாழ்கையில் தான் என்னவாக ஆகவேண்டும் என்று தெரியவர, அதில் மூக்கை நுழைத்து கொண்டு நிற்கிறார் அவரது அப்பா. கடைசியாக டான் சக்கரவர்த்தி டிகிரி வாங்கினாரா.. தனது லட்சிய கனவை சாதித்தாரா.. என்பது மீதிக்கதை..
சிவகார்த்திகேயன் ஜானர்
சிவகார்த்திகேயனின் சக்சஸ் பக்கெட் லிஸ்டில் அடுத்ததாக வந்து சேர்ந்திருக்கிறது ‘டான்’. டாக்டரில் நடிப்பில் கொஞ்சம் வித்தியாசம் காட்டிய சிவா இதில் மீண்டும் தனது காமெடி கிராஃபிற்கு திரும்பியிருக்கிறார். காமெடி, எமோஷன், டான்ஸ் எல்லா ஏரியாவிலும் வழக்கம் போல் சிவாவின் சிக்ஸர்கள்.
இவருக்கும் பிரியங்கா மோகனுக்கும் இடையேயான காதல் காட்சிகள் எல்லாம் ஜோ ஜுவிட் ரகம். இவர்களுடன் வரும் சூரி, ஆர்.ஜே. விஜய், பாலா, முனிஸ்காந்த், காளிவெங்கட், சிவாங்கி என எல்லாக் கேரக்டர்களும் ஏதோ சும்மா சகட்டு மேனிக்கு வந்து போவதில்லாமல் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் ராஜூ ஜெயமோகனுக்கு திரையில் வர ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். சமுத்திரக்கனிக்கு வழக்கம் போல கனமான கதாபாத்திரம்.. அதை அதே அளவு கனமாகவே செய்திருக்கிறார்.
மீண்டும் நிருபித்த எஸ்.ஜே
பூமி நாதனாக வரும் எ.ஜே.சூர்யாவின் மிரட்டலான நடிப்பு படத்தின் மாபெரும் பலமாக அமைந்திருக்கிறது. அவருக்கு உரித்தான பாடிலாங்குவேஜ்ஜூம், டயாலக் டெலிவரியும் தியேட்டரில் அப்ளாஸ்களை அள்ளுகிறது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி காஸ்டிங்கை (கதாபாத்திரத்தேர்வு) மிகத் தெளிவாக செய்துவிட்டார். அதுவே படத்தின் வேலையை பாதிமுடித்துவிட்டது. வழக்கமான கமர்ஷியல் படங்களில் கதாபாத்திரங்களை கையாளுவதுபோலில்லாமல் அவைகளுக்கான வெயிட்டேஜ்ஜை கொடுத்திருப்பது சிறப்பு.
முதல் பாதி கலகலவென செல்ல, இராண்டாம் பாதி கமர்ஷியல் படங்களுக்கே உரித்தான கிளிஷேக்களால் நெழிய வைக்கிறது. ஓவர் டோசேஜ் அட்வைஸ்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம். படத்தின் எல்லா இடங்களிலும் இருக்கும் பாசிட்டிவ் நேச்சுர் கனவை துரத்தும் இளைஞர்களுக்கு நிச்சயம் மோட்டிவேஷன் டானிக். இராண்டாம் பாதியை இன்னும் கொஞ்சம் விரைவாக முடித்திருக்கலாம் என்று கமெண்டுகளை தியேட்டரில் பார்க்க முடிகிறது.
ராக் ஸ்டார் அனி
படத்தில் ஒரு ஹீரோ சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan) என்றால் இன்னொரு ஹீரோ அனிருத். பாடல்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். பாஸ்கரனின் ஒளிப்பதிவு சிறப்பு.. முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இராண்டாம் பாதியிலும் தொடர்ந்து இருந்தால் டான் இன்னும் கொண்டாடப்பட்டிருப்பான்..