Beast New Teaser: பூஜாவின் இடுப்பை பிடிக்க போகும் விஜய் - பீஸ்ட் புதிய டீசர்...!
சன் பிக்சர்ஸ் படத்தின் புதிய புதிய அறிவிப்புகளை சீரான இடைவெளியில் வெளியிட்டு வருகிறது. தற்போது, முப்பது வினாடி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
‘பீஸ்ட்’ படத்தின் புதிய டீசரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், பூஜா ஹெக்டேவுடன் விஜய் காதல் செய்கிறார். அத்துடன் சண்டையில் பட்டையை கிளப்புகிறார்.
விஜய்யின் ‘பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளதால், அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு சில நொடிகளில் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விஜய் படம் வருவதால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் படத்தின் புதிய புதிய அறிவிப்புகளை சீரான இடைவெளியில் வெளியிட்டு வருகிறது. தற்போது, முப்பது வினாடி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான காதல் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், பல சூப்பரான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
புதிய டீசர்
'பீஸ்ட்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.நிர்மல் எடிட்டிங். யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.