Beast Story: பீஸ்ட் எந்த மாதிரியான படம்? அப்டேட் கொடுத்த நெல்சன்!
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படம் எந்த மாதிரியானது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் விளக்கமளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கிவருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
விஜய் படங்களுக்குரிய கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகிவரும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் இயக்கிய டாக்டர் படம் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அதேசமயம் கோலமாவு கோகிலாவில் போதை மருந்து கடத்தலை மையமாக எடுத்துக்கொண்ட நெல்சன் டாக்டர் படத்தில் பெண் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்திருந்தார்.
இதனால் பீஸ்ட் படத்தையும் ஏதாவதொரு கடத்தலை மையமாக வைத்தே நெல்சன் உருவாக்கியிருப்பார் என்ற பேச்சு சமீபத்தில் அதிகம் கேட்கிறது. ஆனால் இதுகுறித்து நெல்சன் திலீப்குமார் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்கள் போலத்தான் பீஸ்ட் படமும் இருக்குமா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
"Captain of the ship" our director @Nelsondilpkumar opens up about #Beast in his recent interview with @baradwajrangan for @fcompanionsouth!@actorvijay @hegdepooja pic.twitter.com/a3ibE8cYol
— #BEAST (@BeastMovieoff) November 2, 2021
அதற்கு பதிலளித்த நெல்சன், “கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் பீஸ்ட் படம் இருக்காது. இது வேற மாரி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. விஜய்யை வைத்து படம் செய்யும்போது அவருக்கும் புதிதாக இருக்க வேண்டும். எனக்கும் வித்தியாச முயற்சியாக இருக்க வேண்டும். பீஸ்ட் படம் நிச்சயம் புதிதாகத்தான் இருக்கும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vijay 66 Update: விஜய் எவ்வளவு எளிமையானவர் தெரியுமா?... இயக்குநர் வம்சி புகழாரம்!
Jai Bhim Review: `ஜெய் பீம்’ யாரும் பேசாத பொருளைப் பேசியிருக்கும் - சூர்யாவின் மைல்கல்!