Vijay Beast Shooting: பீஸ்ட் ஆக்ஷன் மோடு ஆன்.! இன்ஸ்டாவை பற்ற வைத்த பீஸ்ட் பட கேமரா மேன்!
பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவாளராக விண்ணைத் தாண்டி வருவாயா, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார்.
முன்னதாக, பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா சென்றது. இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது சென்னையில் ஷாப்பிங் மால் போன்றதொரு செட் அமைத்து படப்படிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக மீண்டும் படக்குழு ஜார்ஜியா செல்ல இருப்பதாக இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தத் தகவல் உண்மையில்லையாம், இன்னும் 15 நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பீஸ்ட் படம் தொடர்பான இன்னொரு புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்.. அந்தப் புகைப்படத்தில் மனோஜ் தனது முகத்தில் கேமாரவை மாட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பீஸ்ட் ஆக்ஷன் மோடு ஆன் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த நிலையில் இந்தப் புகைப்படத்தையும், மற்றுமொரு சைக்கிள் புகைப்படத்தையும் ட்விட்டரில் ஷேர் செய்த விஜயின் ரசிகர்கள் இன்று காலை முதல் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.பீஸ்ட் படத்தை முடித்தவுடன் விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Beast action Mode
— VTL Team (@VTLTeam) November 9, 2021
DOP @manojdft via Instagram #Master @actorvijay pic.twitter.com/4FMVnA8xxc





















