மேலும் அறிய

Barack Obama : Emmy விருதை பெற்றார் ஒபாமா ! EGOT நிலைக்கு இன்னும் இரண்டு விருதுதான் மிச்சம் !

இதனை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொகுத்து வழங்கியிருந்தார். இதற்காக ஒபாமாவிற்கு சிறந்த விரிவுரையாளர் என்ற அடிப்படையில் இரண்டு கிராமி விருதுகளை வழங்கியிருந்தது

நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான Our Great National Parks என்னும் ஆவணப்படத்திற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது.

Emmy விருதை பெற்றார் ஒபாமா :

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் கடந்த  ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியான ஆவணப்படம்தான் Our Great National Parks. மொத்தம் ஐந்து பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படம் , உலகின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்குகள் குறித்து அழகாக விளக்குகிறது. இதனை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொகுத்து வழங்கியிருந்தார். இதற்காக ஒபாமாவிற்கு சிறந்த விரிவுரையாளர் என்ற அடிப்படையில் இரண்டு கிராமி விருதுகளை வழங்கியிருந்தது . இந்த நிலையில் சிறந்த விரிவுரையாளர் என்ற பிரிவின் அடிப்படையில் அவருக்கு Primetime Creative Arts Emmy Awards வழங்கப்பட்டுள்ளது.

  EGOT :

ஏற்கனவே ஒபாமா கிராமி மற்றும் எம்மா விருதை பெற்றுள்ள நிலையில் ஆஸ்கார் மற்றும் டோனி விருதுகளை பெற்றுவிட்டால் , ஒபாமாவும்  EGOT ( Emmy, a Grammy, an Oscar, and a Tony) விருது பெற்ற நடிகர்களுள் ஒருவராகிவிடுவார். எண்டர்டெயின்மென்ட் வீக்லி டிராக்கரின் கூற்றுப்படி, மெல் ப்ரூக்ஸ், ஹூப்பி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும்ஜெனிஃபர் ஹட்சன் உட்பட 17 பேர் மட்டுமே EGOT  விருதுகளை பெற்றுள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Barack Obama (@barackobama)

படங்களை தயாரிக்கும் ஒபாமா :

2017 இல் அதிபர் பதவியில் இருந்து விலகிய ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா இணைந்து  புத்தகங்களை எழுதினார்கள் . அதன் பிறகு இலாப நோக்கமற்ற அறக்கட்டளையையும் நிறுவினார்கள். அதன்  பிறகு கலையிலும் கொண்ட ஈடுபாடு காரணமாக நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து , சில தயாரிப்பு ஒப்பந்தங்களையும் செய்தனர். அதன் அடிப்படையில் ஒபாமா தயாரித்த  முதல் ஆவணப்படமான "அமெரிக்கன் ஃபேக்டரி" சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதையும் சிறந்த இயக்குநருக்கான எம்மி விருதையும் வென்றது . இருந்தாலும் அந்த விருதுகள் ஒபாமாவிற்கு சொந்தமானது இல்லை. ஒபாமா அதிகம் விரும்பப்பட்ட அமெரிக்க அதிபராக இருந்தவர். 2008 ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, "சர்வதேச இராஜதந்திரம் மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அசாதாரண முயற்சிகளுக்காக" ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget