Johnny Depp Shot: 3வது லெவலுக்கு போலீசை கூப்பிடுவோம்.. ஜானி டெப் ஷாட் - மதுபான விடுதியின் வித்தியசமான விளம்பரம்
உடல் நலத்துக்கு கேடு என கொட்டை எழுத்தில் குறித்து சொன்னாலும், மன வருத்தமோ, சந்தோஷமோ, பதவி உயர்வோ, வேலையிழப்போ நம்மூர் மட்டுமல்ல எல்லா ஊரிலும் மது பானத்தை நாடிசெல்வோர் உண்டு.
உடல் நலத்துக்கு கேடு என கொட்டை எழுத்தில் குறித்து சொன்னாலும், மன வருத்தமோ, சந்தோஷமோ, பதவி உயர்வோ, வேலையிழப்போ நம்மூர் மட்டுமல்ல எல்லா ஊரிலும் மது பானத்தை நாடிசெல்வோர் உண்டு. அதை கணக்கில் கொண்டு தான் பார் ஒன்று சமூக வலைதளம் ஒன்றில் வித்தியாசமான விளம்பரம் கொடுக்க அது உலக அளவில் வைரலாகி உள்ளது.
அந்த பார் (மதுபான விடுதி) சமூக வலைதள விளம்பரத்தில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நீங்கள் பாதுகாப்பற்றவராக உணர்கிறீர்கள? உங்களுக்கு பயமாக இருக்கிறதா? அப்படி என்றால் எங்கள் மதுபான விடுதிக்கு வாருங்கள். எங்களிடம் ஒரு ஷாட் ஜானி டெப் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் மூன்று வெர்ஷன்கள் இருக்கின்றன. நீட் ஷாட் என்றால் பார் டெண்டர் உங்களை கட்டிடடத்தின் வாயில் வரை பத்திரமாக கொண்டு வந்து விடுவார். ஆன் தி ராக்ஸ் ஷாட் எடுத்தால் அவரே உங்களின் வீட்டிற்கு பத்திரமாக ஒரு டாக்ஸி பிடித்து அனுப்பிவைப்பார். வித் லைம் ஷாட் அருந்தினீர்கள் என்றால் எங்கள் ஊழியரே காவல்துறைக்கு தகவலும் சொல்லிவிடுவார். நாங்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் சேவை செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜானி டெப் வழக்கும் பின்னணியும்:
பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இத்திரைப்படம் பல பாகங்களாக வெளி வந்து வெற்றி பெற்றது. இத்திரைப்ப்டத்தில் கதாநாயகனாக ஜாக் ஸ்பேரோவாக நடித்த ஜானி டெப் சிறப்பாக நடித்திருந்தார்.அவரது நடிப்பால் உலகம் முழுக்க ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் நடிகர் ஜானி டெப் மீது அவருடைய முன்னாள் மனைவி அம்பர் ஹேர்ட் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் நேற்று அந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜானி டெப் மீதான குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் ஆம்பர் ஹேர்டிற்கு 15 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு தொடர்பாக ஜானி டெப், "நீதிபதி என்னுடைய வாழ்க்கையை எனக்கு திருப்பி தந்திருக்கிறார். இந்த வழக்கின் தொடக்க முதலே இதில் இருக்கும் உண்மையை வெளியே கொண்டு வருவதாகவே இருந்தது" எனத் தெரிவித்து இருந்தார்.
அதேபோல் ஆம்பர் ஹேர்ட் கூறுகையில், "இந்த தீர்ப்பு என்னைவிட பிற பெண்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால் ஒரு பெண் உண்மையை வெளியே பேசினாலும் அவரை அதிகாரம் மூலம் ஒன்றுமில்லாமல் செய்ய முடியும் என்பதை இது உணர்த்துகிறது. ஒரு அமெரிக்கராக சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேசும் உரிமையை நான் இழந்துவிட்டேன்" எனத் தெரிவித்து இருந்தார்.