Vanangaan: பாலாவின் புது கதாநாயகி இவரா? அருண் விஜய் ஜோடியாகும் 'ஜடா' நடிகை? வணங்கான் படக்குழு தகவல்
அருண் விஜய் நடிப்பில், இயக்குநர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தின் கதாநாயகியாக 'ஜடா' மற்றும் 'ஏமாளி' திரைப்படத்தில் நடித்த ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அருண் விஜய் நடிப்பில், இயக்குநர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தின் கதாநாயகியாக 'ஜடா' மற்றும் 'ஏமாளி' திரைப்படத்தில் நடித்த ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நந்தா மற்றும் பிதாமகன் இரண்டு திரைப்படங்களும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்த படங்கள். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி மீண்டும் 'வணங்கான்' திரைப்படம் மூலம் சேர்வதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவை அனைத்தும் புஷ்வானம் போல புஸ் என ஆனது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா அடுத்ததாக இயக்க இருக்கும் 'வணங்கான்' படம், ஏராளமான குழப்பங்களால் படம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் கதாநாயகனாக முதலில் ஒப்பந்தமாகியிருந்த நடிகர் சூர்யா அப்படத்தில் இருந்து விலகிய பிறகு அவரின் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து தற்போது ஹீரோயின் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வணங்கான் படத்தில் 'ஜடா' நடிகை :
வணங்கான் திரைப்படத்தின் கதாநாயகியாக 'ஜடா' மற்றும் 'ஏமாளி' திரைப்படத்தில் நடித்த ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அருண் விஜய் காது கேளாத வாய் பேச இயலாத ஒருவராக நடிக்கிறார். மார்ச் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.
சூர்யா விலகிய காரணம்
கடந்த ஆண்டு வணங்கான் படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன் ஹீரோவாக நடிகர் சூர்யாவும் நடிகையாக கீர்த்தி ஷெட்டியும் நடிக்க ஒப்பந்தமானார்கள். அந்த வகையில் படத்தின் இயக்குநர் திரைக்கதையில் சிறிது மாற்றம் செய்ததால் அதில் உடன்பாடில்லாமல் அந்த திரைப்படத்தில் இருந்து விலகினார் நடிகர் சூர்யா. அவருக்கு பதிலாக தான் நடிகர் அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஹீரோயினாக கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானது நடிகை கீர்த்தி ஷெட்டி. அவரும் வணங்கான் படத்தில் இருந்து விலகியதால்தான் கதாநாயகியும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.