Bakasuran OTT Release: கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பகாசூரனை திரையிடுங்கள் - இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்
அப்பாவும் மகளும் அமர்ந்து பகாசூரன் படம் பார்க்கும்போது இப்படி ஒரு பிரச்னை நடப்பது தெரியும். விழிப்புணர்வாக அமையும் என்று மோகன்.ஜி கூறியுள்ளார்.
திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் வரிசையில் இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய படம் பகாசூரன். கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியான இந்தப் படம் ஒருபுறம் குடும்ப ஆடியன்சை ஈர்ப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொருபுறம் பெண்களை பின்னோக்கி இழுத்துச் செல்வதாகக் கடும் எதிர்ப்புகளையும் பெற்று வந்தது.
சாம்.சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச்.24) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பகாசூரன் படம் வெளியானது. இந்நிலையில் ஓடிடி வெளியீடு குறித்து முன்னதாக இயக்குநர் மோகன்.ஜி பேசியுள்ளதாவது:
பகாசூரன் அவசியமான கன்டெண்ட்:
"பகாசுரன் படம் நெகட்டிவ் ரிவ்யூக்கள் அதிகம் வந்ததாலேயே நிறைய பேர் திரையரங்கிற்கு சென்று பார்க்கவில்லை. ஆனால் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வந்த பிறகு படம் இப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை, ரொம்ப முக்கியமான மெசேஜ் இது என்று பலரும் கால் செய்து சொல்கிறார்கள். இது எதிர்பார்த்தது தான். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
உங்களுக்கு இந்தப் படம் மெதுவாகச் செல்வதாக உங்களுக்குத் தோன்றலாம் அல்லது உங்களுக்குப் பிடிக்காத கண்டென்ட்டாக தெரியலாம். ஆனால் இது மிகவும் அவசியமான கண்டென்ட். இதுமாதிரி நிறைய பிரச்னைகள் இருக்கு. சமீபத்தில் சர்ச் பாதிரியார் ஒரு பிரச்னையில் மாட்டினார், அதில் எத்தனை பெண்கள் தாங்களாகவே விருப்பட்டே பிரச்னையில் சிக்கியுள்ளார்கள் என்று உங்களுக்குத் தெரியும். இது மாதிரி பல செய்திகள் வருகிறது.
விழிப்புணர்வு:
சமீபத்தில் கூட ஒரு பெண் தன் உடன் படிக்கும் காலேஜ் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு கூட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது. இது மாதிரியான நிறைய பிரச்னைகள் குறித்து இந்தப் படம் பேசியுள்ளது. இதெல்லாம் ஒரு விழிப்புணர்வு. குடும்பமாக அமர்ந்து இந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்றால் இவற்றை பேசித் தீர்க்க ஒரு வாய்ப்பாக அது அமையும்.
அப்பாவும் மகளும் அமர்ந்து இந்தப் படம் பார்க்கும்போது இப்படி ஒரு பிரச்னை நடப்பது தெரியும். விழிப்புணர்வாக அமையும். வணிகரீதியாக வெற்றிபெற, விருது வாங்க இந்தப் படத்தை எடுக்கவில்லை. திரௌபதி போல் ஒரு தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என நம்பியே இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.
கல்லூரி, பள்ளிகள்:
நீங்க பார்ப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். நீங்கள் பார்த்தால் பிறரையும் பார்க்கச் சொல்லுங்கள். கல்லூரிகளிலும் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் மாணவிகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டுங்கள். இது தான் இந்தப் படத்துக்கான என் கடைசி ப்ரோமோஷன். இத்துடன் ப்ரொமோஷனை நிறுத்திக் கொள்கிறேன்” என மோகன்.ஜி பேசியுள்ளார்
மேலும் படிக்க: Raghav Chadha - Parineeti Chopra dating : சம்திங் ராங்... பரினிதி சோப்ராவுடன் டேட்டிங் செய்யும் எம்.பி... ட்ரெண்டிங்காகும் ரைமிங் பதில்