OTT Release : காவிய காதல் முதல் காமெடி காதல் வரை.. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்

சூப்பர் ஹிட் அடித்த படமோ சுமார் ஹிட் படமோ ஓடிடி தளங்களில் எல்லாப் படங்களுக்கும் ஒரே மரியாதைதான். இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்
பீட்சா 3 - த மம்மி
மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின், பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், கவிதா பாரதி, குரேஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பீட்சா 3: தி மம்மி”. அருண்ராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார். ஏற்கனவே பீட்சா படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதியும், 2-ஆம் பாகத்தில் அசோக் செல்வனும் ஹீரோவாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிம்ப்ளி செளத் தளத்தில் வெளியாகிறது.
பேபி
கடந்த ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் பேபி. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரனான ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்த இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஆஹா தமிழின் வெளியாக இருக்கிறது.
ப்ரோ
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வினோதய சித்தம்'. இந்த திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ப்ரோ என்ற பெயரில் உருவாகி . கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வரும் 25 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
அச்சார் & கோ
சிந்து ஸ்ரீனிவாசா மூர்த்தி இயக்கி நடித்திருக்கும் கன்னடப் படம் அச்சார் & கோ. முழுக்க முழுக்க ஃபேமிலி டிராமாவாக அமைந்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.
ப்ளாக் & வைட்
பிரபல தொலைக்காட்சி நடிகர் கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா இணைந்து நடித்துள்ள எமோஷனல் டிராமா படம் ப்ளாக் & வைட். எஸ் தீக்ஷி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வருகின்ற 25 ஆம் தேதி ஜீ ஃபைவில் வெளியாக இருக்கிறது.
ஆக்ரி சச்
டெல்லியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இணையத் தொடர் . தமன்னா கதாநாயகியாக நடித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வருகின்ற ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது





















