Suchitra Shetty: சீரியல் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் கெத்துக்காட்டும் பாக்யா... வீட்டுக்கு வந்த புது வரவு.. ரசிகர்கள் வாழ்த்து..!
பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோயின் சுதித்ரா பென்ஸ் கார் வாங்கி நிஜ வாழ்விலும் கெத்து காட்டியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், நடிகை சுசித்ரா பாக்யா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். அந்த சீரியலில் கணவனால் ஏமாற்றப்படும் பாக்யா, சொந்த காலில் நின்று ஜெயிப்பது தான் அந்த சீரியலின் கரு. சீரியல் மட்டும் அல்ல பாநிஜ வாழ்க்கையிலும் லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் வாங்கி கெத்து காட்டியுள்ளார் சுசித்ரா.
சுசித்ரா தான் வாங்கி புதிய லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் உடன் புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில், தனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமகாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். நிஜ வாழ்விலும் பென்ஸ் கார் வாங்கி கெத்து காட்டியுள்ளார் பாக்யா என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
நடிகை சுசித்ரா நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் பெண்கள் மத்தியில் ஏக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில், குடும்பமே உலகமாக வாழும் நடுத்தர வயதில் இருக்கும் தொடரின் நாயகி பாக்யாவை, கணவன் கோபி ஏமாற்றினாலும், அவள் சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நின்று தனது குடும்பத்தை தாங்கி நிற்கிறாள். சோதனைகளைத் தாண்டி சாதிக்கிறாள். பல நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதால் பாக்கியலட்சுமி சீரியல் பெண்கள், குறிப்பாக குடும்பத் தலைவிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆரம்பத்தில் ஒரு படிக்காத, வெளி உலகமே தெரியாத ஒரு சராசரி பெண்ணாக பாக்யா கேரக்டர் நகர்ந்தது. தற்போது, தன்னை மேலும் பெருகேற்றிக் கொண்டு, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுதல், கேட்டரிங் தொழில் செய்வது என, ஏமாற்றிய கணவன் கோபிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் பாக்யா. இதனால் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சுசித்ரா தான் புதியதாக வாங்கியுள்ள லேட்டஸ்ட் மாடல் கருப்பு நிற பென்ஸ் கார் பக்கத்தில நின்றபடியும், காரை ஓட்டியப்படியும் புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
இந்த பதிவில் சுசித்ரா “உங்களுடன் கைகோர்க்கும் தருணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறைவனின் கையை தொட்டால் போதும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று அதிகமான ரசிகர்கள் பாக்கியாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
.