Kuzhali Release : 16 விருதுகளை பெற்ற "குழலி" திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி ரிலீஸ்.. விவரம் இதுதான் மக்களே..
சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு 16 விருதுகளை பல பிரிவுகளில் வென்றுள்ளது செரா. கலையரசன் இயக்கியுள்ள " குழலி " திரைப்படம். இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 23ம் தேதி வெளியாகிறது.
சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 விருதுகளை பல பிரிவுகளில் வென்றுள்ளது செரா. கலையரசன் இயக்கியுள்ள " குழலி " திரைப்படம். இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 23ம் தேதி வெளியாகிறது.
16 விருதுகளை வென்ற "குழலி" :
முற்றிலும் ஒரு கிராமத்து பின்னணியில் எதார்த்தமான முகங்களை வைத்து செரா. கலையரசன் இயக்கயுள்ள திரைப்படம் "குழலி". இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஏராளமான விருதுகளை தட்டி சென்றுள்ளது. சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, விமர்சன ரீதியாக சிறந்த படம் என மொத்தம் 16 விருதுகளை தூக்கி தட்டி வந்துள்ளது. இந்த தரமான திரைப்படத்தை இணைந்து தயாரித்தவர்கள் கே.பி. வேலு, எஸ். ஜெயராமன் மற்றும் எம்.எஸ். ராமசந்திரன்.
Critically acclaimed film #Kuzhali in Cinemas from 23rd September! 🎬👍🏼💐#Aara #Vignesh @Cherakalaioffl #MukkuziFilms @OorvasiJayaram @iamKarthikNetha @Music_UdhayDM@editorthiyagu @ParasRiazAhmed1@RIAZtheboss @zeemusicsouth pic.twitter.com/2nqU5JaGdF
— V4UMEDIA (@V4umedia_) September 16, 2022
ஹீரோவான காக்க முட்டை விக்னேஷ் :
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களில் அண்ணனாக நடித்த விக்னேஷ் "குழலி" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். காக்க முட்டை படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. அதனை தொடர்ந்து அப்பா, ஆறம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது கிடு கிடுவென வளர்ந்து ஹீரோவாக நம் முன்னால் நிற்கிறார். "குழலி" திரைப்படத்தில் விக்னேஷ் ஜோடியாக நடிகை ஆரா நடித்துள்ளார்.
படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தவர்கள் :
ராஜகுருசாமி, தனிக்கொடி, ஆக்னஸ் தமிழ் செல்வன், கார்த்திக் நேத்தா ஆகியோர் எழுதிய பாடல் வரிகளுக்கு இசையமைத்துள்ளார் டி.எம். உதயகுமார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி இசை பிரிவில் விருதினை தட்டி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷமீர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் திரைக்கதை மிகவும் அழுத்தமாக இருந்ததோடு அதன் வசனங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருப்பது படத்தின் சிறப்பு.
Award Winning Film #Kuzhali to release on September 23! 🎬👍🏼💐#Aara #Vignesh @Cherakalaioffl #MukkuziFilms @OorvasiJayaram @iamKarthikNetha @Music_UdhayDM@editorthiyagu @RIAZtheboss @V4umedia_ @zeemusicsouth pic.twitter.com/incVjX59hw
— Chera.Kalaiyarasan Director (@cherakalaioffl) September 11, 2022
ரிலீசிற்கு தயாராகிறது :
"குழலி" திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் மற்றும் விளம்பரத்திற்கான பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை திரைக்களம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏராளமான விருதுகளை படம் வெளியாவதற்கு முன்னரே பெற்றுள்ளதால் இப்படத்திற்கான ஏதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது