எம்.ஜி.ஆர் கோவத்துல இருந்து இந்த மூன்றெழுத்துதான் எங்களை காப்பாத்துச்சு ! - AVM சரவணன்
அந்த குடுவானுக்கு (சரோஜாதேவியை எம்.ஜி.ஆர் அழைக்கும் விதம் ) தெரியும்ல அவள் சொல்லியிருக்கனும்ல என்றார்.
தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் நடிகர்களின் படங்களை தயாரித்தவர்கள் ஏ.வி.எம் குழுவினர். கோலிவுட் பக்கம் கால் பதிக்க முயற்சிக்கும் எந்தவொரு நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் ஏ.வி.எம் அலுவலக வாசலில் வாய்ப்புக்காக தேடி அலைந்த கதை ஒன்றை வைத்திருப்பார்கள். தமிழ் சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படும் AVM நிறுவனத்தை தொடங்கியவர் ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார். மூன்று தலைமுறைகளாக தரமான படங்களை தயாரித்து புதிய முத்திரையை பதித்திருக்கிறது ஏ.வி.எம். தற்போது ஏ.வி.எம் சார்பில் அழகப்பா செட்டியாரின் மகன்கள் படங்களை தயாரித்து வருகின்றனர். அவர்களுள் முக்கியமானவர் ஏ.வி.எம் சரவணன். எம்.இ.ஆர் பீக்கில் இருந்த காலத்தில் இருந்தே அவருடன் பணியாற்றி வருகிறார். தனது தயாரிப்பு அனுபவம் பற்றி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த சரவணன் எம்.ஜி.ஆர் குறித்து யாரும் அறியாத தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் “ எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கமாம். எங்க யாருக்கும் தெரியாது. அதாவது எம்.ஜி.ஆர் எப்போதெல்லாம் நடிக்க வற்றாரோ அப்போதெல்லாம் ஃபஸ்ட் ஷார்ட் எம்.ஜி.ஆரோடதுதான் எடுக்கனுமாம். எங்களுக்கு தெரியாது. உடனே சரோஜாதேவி சாய்ங்காலம் ஃபிலைட்ல கோயம்பத்தூர் போகனும், அங்க மில்லுல எனக்கு டேரக்டர் மீட்டிங் இருக்கு. நான் சீக்கிரம் வந்தற்றேன் என்னுடைய காட்சிகளை முதல்ல எடுத்தற்றீங்களா என கேட்டதும் , இயக்குநரும் எடுத்துடலாம்னு சொல்லிட்டாரு. இதன் பின்னணியெல்லாம் எங்களுக்கு தெரியாது. எம்.ஜி.ஆர் மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு ஃபர்ஸ்ட் ஷார்ட் எடுக்க நடந்து வர்றாரு. உடனே யாரோ ஒருவர் காதில் ஏதோ சொல்ல திரும்ப போயிட்டார். அப்போதான் எங்களுக்கு இந்த விஷயம் தெரியும் . அதன் பிறகு 11. 12 மணிக்கு மெதுவா செட்டுக்கு வந்தார். நான் கிட்ட போகவே இல்லை. ஒருங்கிணைப்பாளர் உள்ளே போனது வெளியே போங்கன்னு சொல்லிட்டாரு. அவர் அலறி அடித்துக்கொண்டு வந்து சார் அவர் ரொம்ப கோவமா இருக்காரு என்றார். சரி இப்போது பேச வேண்டாம் என அமர்ந்திருந்தோம். அப்போது ஷூட்ட முடிச்சுட்டு எங்கிட்ட வந்து பேசினார். என்ன முதலாளி இப்படி ஆயிடுச்சு என்றார். சார் எங்களுக்கு இந்த விஷயம் தெரியாது என்றேன் . உங்களுக்கு தெரியாது அந்த குடுவானுக்கு (சரோஜாதேவியை எம்.ஜி.ஆர் அழைக்கும் விதம் ) தெரியும்ல அவள் சொல்லியிருக்கனும்ல என்றார். அதன் பிறகு செட்டை மாற்றியமைக்க முடியாது இன்றே ஷூட்டிங் எடுத்தாக வேண்டும் என்பதால் வீட்டில் இருந்து ஜானகி அம்மாவிடம் உணவு செய்து அனுப்ப சொல்லியிருந்தார். அவர் கூட உங்காந்து சாப்பிட சொன்னார். அவர் வீட்டு சாப்பாடு அருமையாக இருக்கும் . அன்னைக்குதான் பிரச்சனை வற்ற மாதிரி இருந்தது. கடவுள் புண்ணியத்தால அந்த மூன்றெழுத்து (AVM)மேல இருந்த மரியாதைதான் எங்களை காப்பாற்றியது” என்றார் சரவணன்.
மேலும் சிம்லாவிற்கு படப்பிற்கு சென்ற சமயத்தில் செக் போஸ்டில் அவரின் வாகனங்களை சோதனை செய்த போது படங்குழுவினர் சற்று பயந்ததாகவும், அங்கிருந்த தமிழர் ஒருவர் எம்.ஜி.ஆரை தெய்வத்தை கூட்டி வந்திருக்கிறீர்களா என காலில் விழுந்ததும் மற்றவர்களும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்ததாக தெரிவிக்கிறார் ஏ.வி.எம் சரவணன். ”சிம்லாவில் எம்.ஜி.ஆர் படக்குழுவினர் அனைவருக்கும் ஸ்வெட்டர் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தார். இயக்குநரை சிறப்பாக கவனித்தார். எனக்கு எதும் கொடுக்கலையா சார் என கேட்டதும். முதலாளி உங்களுக்கு நாங்க கொடுக்க கூடாது, வாங்க கூடாது என எம்.ஜி.ஆர் சொன்னார்“ என தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் சரவணன்.