மேலும் அறிய

Avatar 2 Collection: 7,000 கோடி ரூபாயை வசூலை கடந்த அவதார் 2...! ஹாலிவுட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டுமா..?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், உலகம் முழுவதும்ஜ் ரூ.7,000 கோடியை கடந்துள்ளது.

ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி  வெளியான திரைப்படம் ‘அவதார்’.  பிரமாண்ட பொருட்செலவில் அதில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்தால், படத்தில் எது கிராபிக்ஸ் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக இடம்பெற்று இருந்தது.

இதன் காரணமாக உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. இதனிடையே அவதார் படத்தின் 2ம் பாகமான தி வே ஆஃப் வாட்டர் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 

கதை சுருக்கம்:

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பாண்டோரா உலகின் மக்களுக்கு தன்னால் ஆபத்து நேருகிறது என்பதை அறியும் ஹீரோ ஜேக் சல்லி, குடும்பத்தினரோடு பாண்டோராவில் கடல்வாசிகள் வாழும் பகுதியில் தஞ்சமடைகிறார். அவரை, வில்லனான கர்னல்  எப்படி பழிவாங்க முற்படுகிறார் என்பதே 2 ஆம் பாகத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. 

திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்:

இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம்  வசூலை தொடக்க நாள் முதலே வாரிக் குவித்து வருகிறது. விஷூவல் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ள நிலையில், முதல் 3 நாட்களில்  மட்டும் உலகளவில் இப்படம் ரூ.3600 கோடி வசூலை வாரிக் குவித்தது. அதன்பிறகு வழக்கமான வேலை நாட்கள் தொடங்கிய நிலையில் வசூலில் சிறிதும் குறைவில்லாத வகையில் ரசிகர்கள் குழந்தைகளுடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். 

உலக அளவில் ரூ.7,000 கோடி வசூல்:

அதைதொடர்ந்து படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், உலக முழுவதும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ரூ.7,000 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பான தனியார் நிறுவன அறிக்கையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அந்த திரைப்படம் 855.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அந்த மொத்த தொகையில் 601.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு சந்தையில் வசூலாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது.

1 பில்லியனை எட்டுமா அவதார் - 2?

தற்போதைய ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தால், மினியன்ஸ்; தி ரைஸ் ஆஃப் க்ரூ படத்தின் வாழ்நாள் வசூலான 939.43 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் மற்றும் மார்வெல் திரையுலகின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் -2 திரைப்படத்தின் வாழ்நாள் வசூலான 955.77 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் வசூலையும், அவதார் 2 திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நடப்பாண்டில் வெளியாகி 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில், டாப் கன் மேவ்ரிக் மற்றும்  ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் ஆகியவற்றின் வரிசையில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படமும் எளிதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget