Cinema Roundup: கடிந்து கொண்ட கமல்.. மோசமான நிலையில் சமந்தா..வணங்கான் சர்ச்சை - பரபர கோலிவுட் செய்திகள்!
உள்ளூர் சினிமா செய்திகள் முதல் உலகளவில் உள்ள ஹாலிவுட் செய்திகள் வரை.. டாப் 5 அப்டேட்கள் உள்ளே!
ட்ரெய்லர் வெளியீட்டில் கலந்து கொண்ட கமல்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் வீடு திரும்பியிருந்தார். அவரை டாக்டர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கமல் பங்கேற்றிருந்தார்.
ட்ரெய்லர் வெளியீட்டு விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சகோதரர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்தேன். படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். ரொம்ப நன்றாக உள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். முன்பெல்லாம் பெரிய விபத்து நடக்கும் பொழுது கூட அடுத்து எப்ப ஷூட்டிங் போறீங்க என என்னை பார்த்தால் கேட்பார்கள்.
View this post on Instagram
இப்ப சாதாரண இருமல்தான். ஆனால் மிகப்பெரிய செய்திகள் எல்லாம் எனக்கு வருகிறது. இதற்கு காரணம் ஒன்று ஊடகம், இன்னொன்று பெருகி இருக்கும் அன்பு, என்று நான் நம்புகிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காராவின் அடுத்த படம்
#Suriya - #SudhaKongara project is based on the biopic of Ratan Tata 💥#AbhishekBachchan to play important role in the movie 👌
— AmuthaBharathi (@CinemaWithAB) November 22, 2022
Produced by 2D entertainment 🎬
Pre-production will start once #SooraraiPottru Hindi remake is completed✅ pic.twitter.com/NFL89naHuN
சுதா கொங்கரா ஏர் டெக்கான் கோபிநாத் பயோபிக் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் அப்படத்தில் ரத்தன் டாடாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அல்லது நடிகர் சூர்யா நடிக்க கூடும் என பேசப்படுகிறது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அம்பானியின் பயோபிக் படமாக வெளியான 'குரு' படத்தில் நடித்ததால் ரத்தன் டாடாவின் படத்திலும் அவர் நடிக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அவதார் 2 புக்கிங் ஓப்பன்
நேற்று சென்னையில் அவதார் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் காண ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். சென்னையில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாலாவுடன் கைக்கோர்க்கும் அருவி பட இயக்குநர்
#Vanangaan Update..😃🔥
— Laxmi Kanth (@iammoviebuff007) November 17, 2022
Anchor: Vanangaan epdi vandhruku?
Bala: Vandhruku ila vandhutu iruku..😅
Anchor: Edho Problem aame..??
Bala: Ama ungalukum enakum dha..😂
Thug life..⭐pic.twitter.com/diZHkSxgcJ
வணங்கான் படத்தின் ஹீரோ சூர்யாவுடன் கலந்து ஆலோசித்த பிறகு, படத்தின் கதையை முற்றிலுமாக மாற்றி புதிய கதையை உருவாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் பாலா. மேலும் புதிய தகவலாக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குநர் பாலாவுடன் இணைந்து இப்படத்தில் பணியாற்ற உள்ளார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் 2017ம் ஆண்டு அதிதி பாலன் நடிப்பில் வெளியான 'அருவி' திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அருவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் 'வணங்கான்' திரைப்படம் மூலம் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி சேரவுள்ளார்.
சமந்தாவின் உடல்நிலை எப்படி இருக்கு?
சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து மீண்டு வரும் சமந்தாவின் உடல் நிலை மோசம் அடைந்து வருகிறது என ஒரு தகவல் பரவி வந்தது. இதை அனைத்து மக்களும் உண்மை என்று நம்பினர். பின்னர், இது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமந்தா வீட்டில் உள்ளார் என்றும், எழுந்து நடப்பதற்கு கூடசிரமப்படுகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.