DNA OTT Release : எதிர்பார்க்காத ஹிட் அடித்த அதர்வாவின் DNA...ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அதர்வா , நிமிஷா சஜயன் நடித்து கடந்த மாதம் திரையரங்கில் வெளியான டி.என்.ஏ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது

DNA ஓடிடி ரிலீஸ்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் டி.என்.ஏ. பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியன் சிவா, கருணாகரன், பசங்க சிவகுமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ள நிலையில்ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சிவா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் அதர்வாவின் கரியரில் வெற்றிப்படமாக அமைந்தது டி.என்.ஏ. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியயதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் தோல்விகளால் தவித்த அதர்வா
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானாகாத்தாடி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தனது நடிப்பால் ரசிகர்களிடம் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கினாலும் பெரியளவில் ஹிட் படங்கள் அவருக்கு அமையவில்லை. பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் அதர்வாவுக்கு இன்றுவரை பெயர் சொல்லும் படமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் கமர்சியல் வெற்றியை தந்தது. இதனைத் தொடர்ந்து பூமராங் , 100 , குருதி ஆட்டம் என அடுத்தடுத்து வெளியான படங்கள் தோல்வியை தழுவின. இப்படியான நிலையில் பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டி.என்.ஏ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. வரும் ஜூலை 19 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் டி.என்.ஏ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
From box office hit to your home screen - DNA streaming from 19th July on JioHotstar! ✨#DNA streaming from July 19 on JioHotstar #DNA #DNAStreamingFromJuly19 #DNAonJioHotstar #JioHotstarTamil#DNAMovie @Atharvaamurali #NimishaSajayan #NelsonVenkatesan @Olympiamovis… pic.twitter.com/2ErZlu3bHF
— JioHotstar Tamil (@JioHotstartam) July 16, 2025
பராசக்தி
அடுத்தபடியாக டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இதயம் முரளி மற்றும் பராசக்தி என இரு படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகிறது இதயம் முரளி. மற்றொரு பக்கம் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனின் சகோதரனாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஶ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.





















