தனுஷின் இட்லி கடை படத்தில் இணைந்த அருண் விஜய்...வெளியானது மாஸ் போஸ்டர்
நடிகர் தனுச் இயக்கியுள்ள இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

இட்லி கடை
ராயன் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை . நித்யா மேனன், ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Here we go, @arunvijayno1 in the House#IdlyKadai
— Wunderbar Films (@wunderbarfilms) February 1, 2025
🎬 @dhanushkraja
🎵 @gvprakash
💰@DawnPicturesOff @AakashBaskaran @wunderbarfilms @theSreyas @RedGiantMovies_ @MShenbagamoort3
✂️@editor_prasanna
📹 @Kiran10koushik
🏗️ @jacki_art
👗 @kavya_sriram
🥊 @PeterHeinOffl… pic.twitter.com/KZhmJsOWC7
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் உடனடியாக இட்லி கடை படப்பிடிப்பை தொடங்கினார். ஒரு பக்கம் நயன்தாராவுடனான சர்ச்சை , இன்னொரு பக்கம் மனைவி ஐஸ்வர்யாவுடனான விவாகரத்து , நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு என பிஸியாக இருந்து வரும் தனுஷ் எளிய கிராம கதைக்களத்தை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படம் இட்லி கடை. அதே நேரம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற டீன் ஏஜ் டிராமாவாக இயக்கியிருக்கும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

