Demonte colony 2 Trailer : திகில் விஷுவல் எஃபெக்ட்களுடன் வெளியானது 'டிமான்டி காலனி 2' ட்ரைலர்... மிரண்டு போன ரசிகர்கள்
Demonte colony 2 trailer : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' படத்தின் அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்களுடன் கூடிய ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரில்லர் படங்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், காதல், பீரியாடிக், காமெடி, திரில்லர், பேண்டஸி என பல தரப்பட்ட ஜானர்களில் படங்கள் வெளியாகி வந்தாலும் ஹாரர் கலந்த திரில்லர் படங்களை ரசிகர்கள் என்றுமே மிகவும் ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள்.
2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், மு.க.தமிழரசு தயாரிப்பில் அருள்நிதி, ரமேஷ் திலக், சிங்கம்புலி, எம்.எஸ். பாஸ்கர், சனந்த் உள்ளிட்ட பலரின் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் 'டிமான்டி காலனி'. திரை ரசிகர்களை மிரள வைத்த அப்படத்தை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 'டிமான்டி காலனி 2' படம் உருவாகியுள்ளது. அருள்நிதி நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விஷுவல் எஃபெக்ட்களுடன் கூடிய இந்த ஹாரர் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'டிமான்டி காலனி 2' படத்தையும் அஜய் ஞானமுத்துவே இயக்க அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள சாம்.சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது என்ற அறிவித்துள்ளனர்.
திகிலான கிராஃபிக்ஸ் காட்சிகள், பயமுறுத்தும் செட், மிரள வைக்கும் பின்னணி இசை என 'டிமான்டி காலனி 2' படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் மர்மாகவே நகர்வது ரசிகர்களை திகில் உணர்வை கொடுக்கிறது. அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அசத்தியுள்ளார். இந்த மிரட்டும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Thrills, chills and screams galore ♨️
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) July 24, 2024
Presenting the release trailer of #DemonteColony2
▶️ https://t.co/BTgKhSM1uq
Coming to theatres world-wide on the 15th of August.#DC2ReleaseTrailer#DC2FromAug15 @BTGUniversal @RedGiantMovies_ @arulnithitamil @bbobby @ManojBeno… pic.twitter.com/1lZ0DoHlMJ
'டிமான்டி காலனி 2' காலனி படம் வெளியாகும் அதே ஆகஸ்ட் 15ம் தேதி விக்ரமின் தங்கலான் , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா, பிரசாந்தின் அந்தகன் என படங்கள் களத்தில் இறங்குகின்றன என்பதால் இந்த சுதந்திர தின ஸ்பெஷல் படங்களின் ரிலீஸ் ரசிகர்களின் உற்சாகத்தை அரிகரித்துள்ளது.