Arjun Das: தோளில் சாய்ந்து தூங்க இடம் தேவை... ஃபோட்டோ பகிர்ந்த அர்ஜூன் தாஸ்... கவலையில் ரசிகைகள்!
தனது கரகர குரலுக்கென தனி குரலைக் கொண்டுள்ள அர்ஜூன் தாஸ் சிங்கிளாகவே கோலிவுட்டின் வலம் வரும் நிலையில் பெண்களின் heart throbeஅக மாறியுள்ளார்.

கைதி, மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தும், தன் கணீர் குரலாலும் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் அர்ஜூன் தாஸ்.
கோலிவுட்டில் 2012ஆம் ஆண்டு முதலே இயங்கி வரும் அர்ஜூன் தாஸ் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு லைம்லைட்டுக்கு வந்தார்.
இவர் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான அந்தகாரம் படமும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து கவனமீர்த்து வருகிறார்.
தனது கரகர குரலுக்கென தனி குரலைக் கொண்டுள்ள அர்ஜூன் தாஸ் சிங்கிளாகவே கோலிவுட்டின் வலம் வரும் நிலையில் பெண்களின் heartthrobஆகவும் மாறியுள்ளார்.
முன்னதாக பிரபல நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி அர்ஜூன் தாஸ் உடன் பகிர்ந்த புகைப்படம் அவரது ஏராளமான பெண் ரசிகர்களை பொறாமைக் கொள்ள வைத்து சமூக வலைதளங்களில் வைரலானது.
View this post on Instagram
மேலும் இருவரும் காதலில் இருப்பதாகவும் ஒரு கட்டத்தில் தகவல்கள் பரவத் தொடங்கிய நிலையில், இதனை மறுதலித்ததுடன், அர்ஜூன் தாஸ் முழுவதுமாக உங்களுக்குத் தான் எனக்கூறி அவரது ரசிகைகளை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார்.
இந்நிலையில், அர்ஜூன் தாஸ் தற்போது பகிர்ந்துள்ள மற்றுமொரு புகைப்படம் அவரது ரசிகைகளை கவலைக்குள்ளாக்கி வைரலாகி வருகிறது.
மதிய உணவுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் எனக்கூறி பெண் ஒருவருடன் அர்ஜூன் தாஸ் பகிர்ந்த இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபர் அர்ஜூன் தாஸின் தங்கை தான் எனவும் யாரும் பதட்டப்பட வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் பிறரை ஆசுவாசப்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக வசந்தபாலன் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் வழங்கும் 'அநீதி' திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்து முடித்துள்ளார். துஷாரா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர், ஒரு பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இப்படம் திரைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.





















