Are You Ok Baby: சொல்வதெல்லாம் உண்மை.. கதை சொல்லும் படம்.. Are You Ok Baby படத்தின் வெளியீடு..
வறுமையில் மெடிக்கலில் இருந்து மருந்து திருடும் கணவர், குற்றவாளியாக சித்தரிக்கப்படும் பெண், வழக்கறிஞரின் விசாரணை என டிரெய்லரின் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பை காட்டுகின்றன.
![Are You Ok Baby: சொல்வதெல்லாம் உண்மை.. கதை சொல்லும் படம்.. Are You Ok Baby படத்தின் வெளியீடு.. Are You Ok Baby Official Trailer release Samuthirakani, Abirami, Lakshmy Ramakrishnan and Mysskin have lead role Are You Ok Baby: சொல்வதெல்லாம் உண்மை.. கதை சொல்லும் படம்.. Are You Ok Baby படத்தின் வெளியீடு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/338cff5b751d4183cf06b2b42f09e4e91694797249955102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Are You Ok Baby: உண்மை கதையை அடிப்படையாக கொண்டு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி, சமுத்திரக்கனி நடித்துள்ள ஆர் யூ ஓகே பேபி படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். குடும்ப பிரச்சனைகளை பேசும் அந்த நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சமுத்திரக்கனி, அபிராமி மற்றும் மிஷ்கின் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரோபோ ஷங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் பாவல் நவநீதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
I have much to share about the few hours of experience we had with #Legend Raja sir & Amazing to see the dedication, passion, humility of @thondankani @DirectorMysskin #Abirami #TapasNayak inspite of being accomplished and successful ❤️#DirMysskin is doing a cameo #Workingstills pic.twitter.com/oZeskMpwaU
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) August 13, 2022
படத்தில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு பாடலை இளையராஜா எழுதி, இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. முதலில் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கும் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி தம்பதியினர் குழந்தையை தொலைத்து விட்டு தேடி அலைகின்றனர். இடையே வறுமையில் மெடிக்கலில் இருந்து மருந்து திருடும் கணவர், பணத்துக்காக குற்றவாளி என கூறும் பெண், வழக்கறிஞரின் விசாரணை என டிரெய்லரின் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பை காட்டுகின்றன. இதற்கிடையே சொல்லாதது உண்மை என்ற டிவி ஷோவில் வரும் லட்சுமி ராமகிருஷ்ணனும் வந்து போகிறார்.
இதன் மூலம் ஒரு குழந்தைக்காக இருவர் போராடும் கதையாகவே Are You Ok Baby இருக்கும் என கணிக்கப்படுகிறது. முன்னதாக படம் குறித்து பேசியிருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டதாகாவும், இதன் மூலம் மக்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இது சொல்லப்படவேண்டிய கதை என்றும், படத்தில் இளையராஜா தனது இசையின் மூலம் மேஜிக் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)