Archana gets Emotional: 7 பக்க கடிதம்.. சொலிட்டர் மோதிரம்.. மகள் கொடுத்த கிஃப்ட்.. தேம்பி தேம்பி அழுத விஜே அர்ச்சனா..!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான அர்ச்சனா, தனது மகள் கொடுத்த கிஃப்டை பார்த்து அழுத வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான அர்ச்சனா, தனது மகள் கொடுத்த கிஃப்டை பார்த்து கதறி அழுத வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளியான அர்ச்சனா நேற்று தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகளான சாரா, அம்மாவுக்காக 7 பக்க அளவில் கடிதம் ஒன்றையும், அத்துடன் மோதிரம் ஒன்றையை சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக கொடுத்திருக்கிறார்.
இதை சற்றும் எதிராபாரத அர்ச்சனா, மிகவும் எமோஷனல் ஆகி, மகளை கட்டிப்பிடித்து, கதறி அழுதார். இந்த வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் அர்ச்சனா, “எனது மகளான சாரா, எனக்காக, எமோஷனல் நிறைந்த மொமண்டுகளை தொகுத்து ஏழு பக்க அளவில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள்.
மேலும் எனது முதல் சொலிட்டர் மோதிரத்தையும் பரிசாக கொடுத்திருக்கிறாள். எனது 40 ஆவது பிறந்தநாளை இப்படியான ஒரு அழகான தருணமாக மாற்றியதற்கு நன்றி சாரா” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவும், அவர் எழுதிய பதிவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சன் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக, வலம் வந்த விஜே அர்ச்சனா தொழிலதிபர் வினித் முத்துக்கிருஷ்ணனை கடந்த 2004 ஆம் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்ட அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் சின்னத்திரைக்கு தனது மகள் சாராவுடன் ரீ எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, டாக்டர் படத்தில் தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார்.