ஜிவி - சைந்தவின் பாலமாக இருக்கும் அன்வி; ரிஹானா ஆசை நிறைவேறுமா?
ஜிவி பிரகாஷூம், சைந்தவியும் மீண்டும் ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வர வேண்டும் என்பதே என் ஆசை என ஜிவியின் தாயார் ஏ.ஆர். ரிஹானா கூறியுள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரிஹானா. இவரது மகன் ஜிவி பிரகாஷ். சினிமாவில் இசையமைப்பாளாரக ஆரம்பித்து இப்போது ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்த, ஜிவி பிரகாஷ் 2013 ஆம் ஆண்டு பின்னணி பாடகியான சைந்தவியை திருமணம் செய்தார்.
சைந்தவி - ஜிவி பிரகாஷ் விவாகரத்து:
பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து, திருமணம் செய்து கொண்ட நிலையில் கிட்டத்தட்ட 11 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதோடு இனிமேல் நண்பர்களாக இருப்போம் அறிவித்தனர். இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில், ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் சைந்தவி பாட இருப்பதாக தகவல் வெளியானது. அண்மையில் மலேசியாவில் நடந்த, இசை கச்சேரியில் இருவரும் பாடியபோது... மேடையில் தன்னுடைய மகளையும் ஏற்றி விட்டு போ.. போய் அப்பா கூட டான்ஸ் ஆடு என சைந்தவி மகளை ஊக்குவித்த வீடியோ வைரலானது.
ரிஹானாவின் ஆசை:
இந்த நிலையில் தான் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். ஒன்றாக இணைந்து வீட்டிற்கு வர வேண்டும் என்று ஜிவி பிரகாஷின் தாயார் ரிஹானா கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருமே ஒருவருக்கொருவர் பேசிக்கிட்டு தான் இருக்காங்க. அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதைப் பற்றி நான் ஒன்றும் பேசவில்லை.
அவர்கள் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று திருமணம் செய்து கொண்டார்கள். இப்போது அவர்கள் தான் பிரிந்து வாழ வேண்டும் என்று முடிவு செய்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், எதற்காக பிரிந்தார்கள் என்று காரணம் தெரியவில்லை. நேரம் காலம் சரியில்லையா என்பது குறித்து ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும். இருவரும் ஒன்றாக இணைந்து வீட்டிற்கு வர வேண்டும் என்பதே எனது ஆசை என ரிஹானா கூறியுள்ளார். மகள் அன்விகாகவாகவு இருவரும் ஒன்று சேர்வார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட!!