Ponniyin Selvan Teaser Launch: ராஜ்புத் குர்தா.. பட்டு வேட்டி.. ஷூ சாக்ஸ்.. கலந்து கட்டிய காஸ்டியூம்.. கவனம் ஈர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்..!
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானின் உடை கவனம் ஈர்த்து இருக்கிறது.
![Ponniyin Selvan Teaser Launch: ராஜ்புத் குர்தா.. பட்டு வேட்டி.. ஷூ சாக்ஸ்.. கலந்து கட்டிய காஸ்டியூம்.. கவனம் ஈர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்..! AR Rahman Speech at Ponniyin Selvan Teaser Launch Event Music Director AR Rahman Praises Maniratnam Ponniyin Selvan Teaser Launch: ராஜ்புத் குர்தா.. பட்டு வேட்டி.. ஷூ சாக்ஸ்.. கலந்து கட்டிய காஸ்டியூம்.. கவனம் ஈர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/deda328b737d03d4679a88991af96f441657352644_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானின் உடை கவனம் ஈர்த்து இருக்கிறது.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிற திரைப்படம் பொன்னியின் செல்வன் - பாகம் 1. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படத்திற்கு மணியின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது..உடல்நலக்குறைவால் விக்ரம் நிகழ்ச்சியில் பங்கேற்காத நிலையில், கார்த்தி,விக்ரம் பிரபு, த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, மணிரத்னம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
ராஜ்புத் ஸ்டைல்
சிவப்பு பட்டு சேலையில் த்ரிஷா ஒரு பக்கம் குந்தவை பிராட்டியாராக மினுமினுங்க, இன்னொரு பக்கம் வந்தியத்தேவனாக வந்த கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், பார்த்திபேந்திர பல்லவனாக வந்த விக்ரம் பிரபு ஆகியோர் ராஜ்புத் ஸ்டைல் குர்தா ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.
அங்கும் தனித்துவம்
மணிரத்னம் வழக்கம் போல ஜிப்பாவில் வர, ஏ.ஆர். ரஹ்மான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான ஆடையில் வந்திருந்தார். ஆமாம், மேலாடை ராஜ்புத் ஸ்டைலிலும், கீழே பட்டு வேட்டியிலும், அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கருப்பு ஷூ, சாக்ஸையும் அணிந்தும் வந்திருந்தார். அவரது இந்த ஆடை நிகழ்ச்சியில் தனிக்கவனம் பெற்றிருந்தது.
#ARRahman's entry !!! Mad craze 🥵💥🥳
— A.R.Rahman Fans (@ARRahmanFCtwt) July 8, 2022
That " Thalaivaaa" sound 🫂 Rahmaniacs #PonniyinSelvanTeaser @arrahman👑 pic.twitter.com/Bsz8B1Xvve
மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது
“ 30 வருடங்களாக அவர் தான் என் பாஸ் என்றும், ஒருவரின் திறமையை எப்படி வெளியில் எடுக்க வேண்டும் என்பது அவருக்கும் தெரியும். இந்த படம் நம்ம படம்... இந்தியாவோட படம் என தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், இவ்வளவு பெரிய படத்தை ஆரம்பித்த சில நாட்களில் ஊரடங்கு போடப்பட்டது. அந்த சமயத்துல உயிரையும் பணயம் வச்சு இந்த ஒட்டுமொத்த குழுவும் இவ்வளவு பிரமாண்டமாக படத்தை எடுத்துருக்காங்க...உங்களுக்கு பொன்னியில் செல்வனின் இசை பிடிக்கும் என நினைக்கிறேன். எங்களால முடிந்ததை பண்ணியிருக்கிறோம்” என ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)