Poovaiyar Gabriella A R Rahman Selfie | வைரலாகும் பூவையார் - கேப்ரியெல்லாவின் ஏ.ஆர்.ரஹ்மான் செல்ஃபிகள்..
விஜய் டிவி புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக உள்ளது
புகழ்பெற்ற இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் '99' பாடல்களுடன்ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறிய பின்னர்' மூப்பிலா தமிழ் தாய்யே 'என்ற பாடலில் பணியாற்றுவதாகத் தெரிகிறது. இசையமைப்பாளர் அதிகம் இளைஞர்களுடன் பணியாற்றுவதில் வல்லவர் , தற்பொழுது சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரை ' மூப்பிலா தமிழ் தாயே" பாடலுக்காக அவர்களுடன் பணியாற்றினார் என்பது தெரியவந்துள்ளது .
View this post on Instagram
கேப்ரியெல்லா மற்றும் பாடகர் பூவையார் ஆகியோருடன் இசை மேஸ்ட்ரோ இரண்டு செல்ஃபிக்களை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் கேப்ரியெல்லாவுடன் பாடலில் தனது பங்கை முடித்து விட்டார் என்று ஒரு செல்ஃபி பகிர்ந்துள்ளார். பின்னர் பூவையார் உடன் "Most Entertaining beautiful Voice" என்று மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் .
View this post on Instagram
பூவையார் பிரபலமான பாடல் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர்' மூலம் பிரபலமான பிறகு 'பிகில் ' மற்றும் 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்துள்ளார் , கேப்ரியெல்லா 'சுந்தரி' சீரியலில் தற்பொழுது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் . மேலும் அவரது முதல் படம் 'அய்ரா'வில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தப் பாடலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் .