ஓணம் விருந்துக்கு ஓஹோ போட்ட அனுஷ்கா, விராட்.. லண்டன் ட்ரீட் க்ளிக்ஸை பகிர்ந்த விருஷ்கா..!
ஓனம் தினத்தன்று லண்டனில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சென்ற அனுஷ்கா அங்குள்ள உணவை கண்டு அசந்து போனதாக கூறப்படுகிறது.
திரைத்துறையில் அனைவருக்கும் மிகவும் பேவரைட்டான ஜோடி என்றால் அனுஷ்கா சர்மா- விராட் கோலி தம்பதிதான். இவர்கள் இருவரும் 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஜோடியாக இருக்கும் இவர்கள் தாங்கள் வெளியில் செல்லும்போது எடுத்த புகைப்படங்கள், பார்த்த இடங்கள் குறித்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது லண்டனுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள், இருவரும் அங்குள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு சென்றனர்.
View this post on Instagram
ஓனம் தினமான அன்று அவர்கள் சென்ற ரெஸ்டாரன்ட்டின் பெயர், டென்ட்ரில் கிச்சன். ஆன்லைனில் இந்த உணவகத்தை கண்டுபிடித்த அனுஷ்கா சர்மாவும் கோலியும், அது குறித்த ரேட்டிங்கை பார்த்துவிட்டு டேபிள் புக் செய்து சென்றுள்ளனர். அங்கு ஓணம் ஸ்பெஷல் ட்ரீட்டை சாப்பிட்ட அனுஷ்கா, கோலி, இதுபோன்ற உணவை இதுவரை சாப்பிட்டதே இல்லை என அசந்து போனார்களாம்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் வெளியே சென்றாலே அதனை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு ஒரு சூப்பர் ஃபேன் கூட்டம் ரெடியாகவே இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)