Annaaththe Diwali | அண்ணாத்த FDFS.. ரோஹிணி தியேட்டரில் முதல் ஆளாக ஆஜரான தனுஷ் குடும்பம்..
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
தனது குடும்பத்துடன் முதல் நாள் முதல் காட்சியைக் காண்பதற்காக திரையரங்குக்கு சென்றுள்ளார் நடிகர் தனுஷ். அவருடன் மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோரும் சென்றுள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று அது குறித்து உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Our @dhanushkraja from @RohiniSilverScr with Entire Family #AnnaattheFDFS #Annaththe 🤗#Karnan #Maaran pic.twitter.com/t5fRG8Sle6
— DHANUSH TRENDS (@Trendz_Dhanush) November 4, 2021
அதேபோல குஷ்பு பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், “இவ்வளவு சீக்கிரமா இதுவரைக்கும் முதல் நாள் முதல் ஷோ எப்போவும் போனதில்ல. ஆனாலும் பரவாயில்லை. கிளம்பிட்டேன். அண்ணாத்த படமாச்சே. சூப்பர் ஸ்டார் ஆச்சே என ஜாலி ட்வீட் போட்டிருக்கிறார்..”
On my way to watch #AnnaattheFDFS
— KhushbuSundar (@khushsundar) November 3, 2021
Never have I ever watched a film this early.. but then its ok!! Its #Superstar you see. Its #Annatthe Enjoy the movie in theatres. Let's trend #Annaatthe #Superstar #Rajinism 🎉🎆🧨❤👍
இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து இயக்குநர் சிவா எக்ஸ்க்ளூசிவான தகவல்களை தெரிவித்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், “மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படம் எடுப்பதற்கான கட்டமைப்பும், ஆர்வம் ஆகிய இரண்டுமே இருக்கக்கூடிய நிறுவனம். கலாநிதி மாறன் சாரின் படங்கள் மீதான ஆர்வம் அவர் கதைக்கேட்ட விதத்திலேயே தெரிந்தது. ரொம்ப ரசித்து கதைக்கேட்டார். கதைக்கேட்டு முடித்த உடனேயே, அண்ணாத்த படம் பிளாக் பஸ்டர் படமாக இருக்கப் போகிறது என தெரிவித்தார். அவர் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். வழக்கமாக ஒரு படத்திற்கு ஒரு தீம் மியூசிக்தான் இருக்கும். ஆனால் அண்ணாத்த படத்திற்கு 3 தீம் மியூசிக் உள்ளன. 3க்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு இருக்கும் ஒரே சம்பந்தம் அவை கொடுக்கும் உற்சாகம் மட்டுமே. அது இசையமைப்பாளர் இமானின் மேஜிக் என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்த்து முடித்து விட்டு மாறன் சார் வெளியே வந்து என்னைப் பார்த்து கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அதை ஒரு இயக்குநராக என்னால் மறக்கவே முடியாது. படம் பார்க்கும் அனைவருக்கும் முழு திருப்தியையும், சந்தோசத்தையும் அண்ணாத்த படம் கொடுக்கும்” என தெரிவித்தார்.