Nayanthara's Annapoorani: கையில் கரண்டியுடன் அன்னபூரணியாக வரும் நயன்தாரா..
நயன்தாராவின் அன்னபூரணி படம் ரிலீசாவது குறித்த அப்டேட்டை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சமையலறையில் கரண்டியை பிடித்தபடி நயன்தாரா காணப்படுகிறார்.
Nayanthara's Annapoorani: நயன்தாராவின் 75-வது படமாக உருவாகியுள்ள அன்னபூரணி படம் டிசம்பர் ஒன்றாம் தேதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, ரஜினி, சரத்குமார், விஜய், ஜெயம்ரவி உள்ளிட்டோருடன் நடித்ததுடன், சோலோ பர்ஃபாமன்ஸிலும் நடித்து அசத்தியுள்ளார். நடிப்பில் ஆக்ஷனிலும் அசத்தும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார். அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஜவான் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.1000 கோடியை வசூலித்ததுடன் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த இறைவன் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி படம் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி படத்தை, ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தின் டைட்டில் வீடியோ படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிராமண பெண்ணாக நடித்த நயன்தாரா பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் புத்தகத்தில் ஒளித்து வைத்து அசைவம் சமைப்பது தொடர்பான புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மற்றவர்கள் பூஜை, வழிபாடு என்றிருந்த நயன்தாராவின் வீடியோ இணையத்தில் வைரலானது.
#Annapoorani releasing in theatres — December 1st. pic.twitter.com/ilK8IHcDbR
— LetsCinema (@letscinema) October 31, 2023
இந்த நிலையில் நயன்தாராவின் அன்னபூரணி படம் ரிலீசாவது குறித்த அப்டேட்டை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சமையலறையில் கரண்டியை பிடித்தப்படி நயன்தாரா காணப்படுகிறார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 234-வது படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜவான் போன்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ள நயன்தாரா கமல்ஹாசன் படத்தில் ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Leo Success Meet : கையில் பேண்ட் இருந்தால் உள்ளே வரலாம்..லியோ வெற்றிவிழாவிற்கு செல்ல இதுதான் Codeword
Raththam OTT Release: ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்' படம்... இதுதான் தேதி!