மேலும் அறிய
Advertisement
‛எனக்கு 3வதும் இல்லை... 4வதும் இல்லை...’ கணவர்கள் எண்ணிக்கை பற்றி மவுனம் கலைத்த அவதாரம் அன்னபூரணி!
1ம் தேதி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். எந்த வழக்கும் என் மீது இல்லை. இனி நடத்துவதாக இருந்தால், முறையாக அனுமதி பெற்று நடத்துவேன். எனக்கு மோசமான வாட்ஸ்ஆப் எல்லாம் வருகிறது. நான் தலைமறைவாக இல்லை.
ஒருநாள் அளித்த பேட்டியில் சரியான விளக்கம் இல்லை எனக்கூறி, பல்வேறு கேள்விகளை முன்வைத்து சமூக வலைதளத்திலும், ஊடகத்திலும் அன்னபூரணி அரசு அம்மா மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது முறையாக, இணையம் முன்பு தோன்றி நேரலையில் விளக்கம் அளித்தார் ‛அவதார்’ அன்னபூரணி அரசு அம்மா. இதோ அவரது அந்த பேட்டி:
‛‛எல்லா மீடியாக்களும் என்னை மிரட்டுகிறார்கள். எங்களுக்கு பேட்டி தரவில்லை என்றால், நாங்கள் தவறாக தான் சித்தரிப்போம் என்றார்கள். என் குழந்தைகள் அன்பின் மிகுதியில் என்னை ஆதிபராசக்தி என்று அழைத்தார்கள். இனி என்னை அவ்வாறு அழைக்கமாட்டார்கள். அம்மா என்றே அழைப்பார்கள். எனக்கு மூன்றாவது கணவர், நான்காவது கணவர் என்று கூறும் பெயர்கள் கூட யார் என எனக்கு தெரியாது. என்னை தேடி வரும் குழந்தைகளை கொச்சை படுத்துகிறீர்கள். யாருடனும் தொழில் போட்டி போட நான் வரவில்லை. நான் வந்த நோக்கம் வேற. இங்கு ஆன்மிகம் தவறாக போய் கொண்டிருக்கிறது. நீங்க யார், உங்களை இயக்குவது எது, என்பதை உணர்த்தவே நான் வந்துள்ளேன்.
என்னைத் தேடி அம்மாவா, தாயாக தேடி வருபவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன். தவறான கண்ணோட்டத்தில் எனக்கு வாட்ஸ்ஆப் அனுப்பாதீங்க. நான் அந்த மாதிரி ஆள் இல்லை. சமுதாயத்தில் நடப்பதைப் போன்று என்னையும் நினைக்கிறீர்கள். அதை வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. ரொம்ப ரொம்ப கொச்சை படுத்துறீங்க. என்னை தவறா பேசுவது, அவரவர் தாயை கொச்சைப்படுத்துவதற்கு சமம். அரசு உடன் வந்ததை கொச்சைப்படுத்தி, மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசாதீங்க.
அரசு மர்மமான முறையில் இறந்ததாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூட என்னிடம் உள்ளது. அதை நான் வழங்க வேண்டிய இடத்தில் வழங்குவேன். இது தெரியாமல், என் மீது பழி போடுகிறீர்கள். இதோடு அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இனி ஆதிபராசக்தி என்ற பெயரை பயன்படுத்தமாட்டேன்; அம்மா என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துவேன்.
1 ம் தேதி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். எந்த வழக்கும் என் மீது இல்லை. இனி நடத்துவதாக இருந்தால், முறையாக அனுமதி பெற்று நடத்துவேன். எனக்கு மிக மோசமான வாட்ஸ்ஆப் எல்லாம் வருகிறது. நான் தலைமறைவாக இல்லை. என்னை யாரும் தேடவில்லை. செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு நான் போன் செய்து தெளிவுபடுத்திவிட்டேன். இவ்வாறு அந்த பேட்டியில் அன்னபூரணி அரசு அம்மா பேசியுள்ளார்.
இனி இதற்கு எந்த மாதிரி எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தஞ்சாவூர்
ஜோதிடம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion