Anna Serial: கனியின் மனசை மாற்ற வந்த மீனாட்சி.. ஷண்முகம் தீட்டிய திட்டம் - அண்ணா சீரியல் இன்றும் நாளையும்!
இதையெல்லாம் பார்த்து “எதுக்கு இதெல்லாம்.. யாரும் அப்படி வர மாட்டாங்க” என்று சொல்ல, ஷண்முகம் அதை ஏற்க மறுக்கிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வீட்டைச் சுற்றி நண்பர்களை காவலுக்கு நிறுத்த, பரணி அதைப் பார்த்து ஷாக்கான நிலையில், இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது பரணி இதையெல்லாம் பார்த்து “எதுக்கு இதெல்லாம்.. யாரும் அப்படி வர மாட்டாங்க” என்று சொல்ல, ஷண்முகம் அதை ஏற்க மறுக்கிறான். வயசான ரமேஷ் “ஷண்முகம் நீ போய் தூங்குபா, எங்களை மீறி யாரும் வர முடியாது. நாங்க பார்த்துக்கறோம்” என்று தடுமாறி கீழே விழ ஒரே பன் மூவ்மெண்டாக இருக்கிறது.
இதனையடுத்து மறுநாள் காலையில் ஷண்முகம் எழுந்து வெளியே வர, இவர்கள் தூங்கிக் கொண்டிருக்க சண்முகத்தை பார்த்ததும் “இப்போ தான் தூங்கினோம்” என்று சமாளிக்கின்றனர். அடுத்து மறுபக்கம் சௌந்தரபாண்டி மீனாட்சி மற்றும் ராஜ மாணிக்கத்திடம் நீங்க பஞ்சாயத்தைக் கூட்டினால் கூட கனியோட விருப்பத்தைக் கேட்டு தான் முடிவெடுப்பாங்க, அவ ஷண்முகம் கூட தான் இருப்பேன்னு சொல்லுவா. அதனால் ஸ்கூலுக்கு போய் கனியை சந்தித்து நீங்க தான் அவளோட அப்பா அப்பான்னு புரிய வைங்க. பஞ்சாயத்தில் மத்ததை நான் பார்த்துக்கறேன்” என்று சொல்கிறார்.
ஷண்முகம் வீட்டில் வீரா, ரத்னா கிளம்பி தயாராகி கனிக்காக காத்திருக்க, ஷண்முகம் “நீங்க போங்க கனியை நான் கூட்டிட்டு வந்து விடுறேன்” என்று சொல்கிறான். ரத்னாவிடம் செக்யூரிட்டியிடம் “கனியை பார்க்க யார் வந்தாலும் விடக் கூடாது” என்று சொல்ல சொல்கிறான். அடுத்து கனியை பைக்கில் கூட்டி வர பைக்கிற்கு முன்பும் பின்பும் அரிவாளுடன் ஆட்கள் பாதுகாப்பிற்கு வருகின்றனர்.
ஸ்கூல் வந்த சௌந்தரபாண்டி கனி பேமிலியுடன் காத்திருக்க, ரத்னா மட்டும் தனியாக ஆட்டோவில் வந்து இறங்குகிறாள். அவள் செக்யூரிட்டியிடம் எதையோ சொல்ல “எல்லாம் ஷண்முகம் ஏற்பாடா தான் இருக்கும்” என்று சொல்லி மீனாட்சி உள்ளே போய் மறைந்திருக்க சொல்லி, ஸ்கூலுக்குள் அனுப்பி வைக்கிறார்.
பிறகு ஷண்முகம் கனியை அழைத்து வந்து ஸ்கூலில் விட்டுட்டுப் போக மீனாட்சி “தேன்மொழி நில்லுடி” என்று கனியை நிறுத்தி “நான் உன்னை பெத்த அம்மா டி” என்று பேச, கனி என்னை விட்டுடுங்க என்று பயந்து ஓட, இதைப் பார்த்த ரத்னா மீனாட்சியை பிடித்து திட்டுகிறாள். மீனாட்சி “அவ என் பொண்ணு, என் பொண்ணு கிட்ட என்னையே பேச விட மாட்டேங்கறீங்க” என்று கோபப்பட, ரத்னா “அவ எங்க தங்கச்சி, உங்க கிட்ட பேச விட மாட்டோம்” என்று சொல்லி துரத்தி விடுகிறாள்.
இதனையடுத்து மீனாட்சி சௌந்தரபாண்டியிடம் “என் பொண்ணையே என் கிட்ட பேச விட மாட்றாங்க” என்று அழுது புலம்ப, “இதெல்லாம் ஷண்முகம் திட்டமா தான் இருக்கும்” என்று சொல்கிறார். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.