Anirudh Concert: ஜெர்மனியின் செந்தேன் மலரே..வெளிநாட்டில் லைவ் நிகழ்ச்சி நடத்தும் அனிருத்!
Anirudh Ravichander live concert: பிரபல இசையமைப்பாளர் அனிருத், ஜெர்மனியில் லைவ் கான்ஸர்டை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானாவர் அனிருத் ரவிசந்திரன். அறிமுகமான முதல் படத்திலேயே “ஒய் திஸ் கொலவெறி” பாடல் பட்டிதொட்டியெங்கும் பரபரக்க, “யாரு ராசா நீ” என எல்லோரையும் மலைப்புடன் கேட்க வைத்தவர், அனிருத்.
சூப்பர் ஹிட் பாடல்கள்:
இதுவரை,ஃபலாப் சாங் தராத இசையமைப்பாளர்களுள் அனிருத்தும் ஒருவர். தனுஷ் -அனிருத் ஒரு கலக்கல் காம்போ என்றால், சிவகார்த்திகேயன்-அனிருத் அதைவிட அதிக ஹிட் கொடுத்த காம்போ. இவருக்கும் கார்த்திகேயனுக்குமான கூட்டனி செம்மையாக செட் ஆக, எதிர் நீச்சல் படம் முதல் டான் படம் வரை, பெரும்பாலான படங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்தே வேலை பார்த்தனர்.
படங்களுக்கு இசையமைப்பது மட்டுமன்றி, தானாக சிங்கிள் பாடி ரிலீஸ் செய்வது, பிற இசையமைப்பாளர்களின் ஆல்பம் சாங்குகளில் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் அனிருத். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு “மாஸ் மரணமாக” பாடல் பாடிய இவர், சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் உலக நாயகனுக்கு “தி ஈகிள் இஸ் கம்மிங்” என டைட்டில் சாங் போட்டார். இப்படி முன்னனி ஹீரோக்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக வலம் வரும் இவர், சமீப காலமாக இசை நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.
ஜெர்மனியில் கான்ஸர்ட் நடத்தும் அனிருத்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களாக உள்ள ஏ ஆர் ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தங்களது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்த லிஸ்டில் இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார். சென்னை-கோவை ஆகிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர், தற்போது வெளிநாட்டில் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம்’ இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
View this post on Instagram
இது குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் போஸ்ட் செய்துள்ள அவர், ஜெர்மனியில் நடக்கும் மிகப்பெரிய தென்னிந்திய நிகழ்வில் கலந்து கொள்ள தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அனிருத்தின் இந்த கான்ஸர்ட் அடுத்த ஆண்டின் ஜூன் மாதம் 10 ஆம் தேதி, நடைபெறவுள்ளது. இது குறித்து அனிருத் வெளியிட்டுள்ள பதிவில், “எப்போது அமெரிக்காவிற்கு வருவீர்கள்? லன்டனிற்கு வருவீர்கள்?” என அவரது ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகி்ன்றனர்.
இதற்கு முன்னர் அனிருத் சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

