மேலும் அறிய

Aneethi Teaser: ரத்தம் தெறிக்க விறுவிறு ஆக்‌ஷன்... பயம் காட்டும் அர்ஜூன் தாஸ்... வெளியான ‘அநீதி’ டீசர்!

நடிகர் அர்ஜூன் தாஸ் 'அந்தகாரம்' படத்துக்குப் பிறகு ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். துஷாரா விஜயன்  முதன்முறையாக இப்படத்தில் அர்ஜூன் தாஸூக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா நடித்துள்ள 'அநீதி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கவனமீர்த்த டீசர்

ஜெயில் படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் அநீதி. நடிகர் அர்ஜூன் தாஸ் 'அந்தகாரம்' படத்துக்குப் பிறகு ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். துஷாரா விஜயன்  முதன்முறையாக இப்படத்தில் அர்ஜூன் தாஸூக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் புகழ், காளி வெங்கட் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. த்ரில்லர் ஜானரில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீசரில் டெரர் லுக்கில் அர்ஜூன் தாஸ் தோன்றும் காட்சிகள் கவனமீர்த்துள்ளன.

 

மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள அர்ஜூன் தாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்

முதலில் பெயரிடப்படாமலேயே தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘அநீதி’ எனும் படத்தின் தலைப்பு, டைட்டில் டீசர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடந்து பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 21ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. 

முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வசந்தபாலன், “வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்தக் காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த 'அநீதி' திரைப்படம் வருகிறது.

நீதி கிடைக்காதவர்களின் குரலே அநீதி

நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இப்படம் பிரதிபலிக்கும். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள 'அநீதி' படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சாருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு முன் வந்தார்.

அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி." என உணர்ச்சிகரமாகப் பேசினார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனமீர்த்து வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget