சும்மா இருடின்னு சொல்ல முடியாது..இப்போ உலகம் வேற மாதிரி: MeToo குறித்து ஆண்ட்ரியா.. ஒரு ஃப்ளாஷ்பேக்
பலநூறு வருடங்களாகவே ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த உலகமாகவே இருந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் துணிச்சல் மிக்க நாயகிகளுள் ஆண்ட்ரியாவும் ஒருவர். அவ்வபோது மேடைகளில் வெளிப்படையாக தனது கருத்துகளை பகிரக்கூடியவர். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் metoo பற்றியும் அதன் தாக்கம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா.
ஆண்டிரியா கூறியதாவது :
”me too பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால்... பலநூறு வருடங்களாகவே ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த உலகமாகவே இருந்திருக்கிறது. இப்போதான் எல்லாம் மாறியிருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்னதாக கூட உலகம் வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.” Metoo moment ஹாலிவுட்ல இருந்துதான் தொடங்கியது. மிகப்பெரிய தயாரிப்பாளரான harvey weinstein மீது பல பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார்கள் . அது எவ்வளவு பெரிய முன்னேற்றம். ஒரு மிகப்பெரிய ஆளின் பிம்பத்தை வெளியில் கொண்டுவந்தது பிரமிப்புதானே.து கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் செய்திருக்க முடியுமா . இப்போ உலகம் வேறு மாதிரியாக மாறியிருக்கிறது. இப்போது உலகம் பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க தயாராகிவிட்டது. “ஏய் சும்மா இருடி“ அப்படினு யாரும் சொல்ல முடியாது. ஏன் பழைய கதையை ஏன் இப்போ பேசுறீங்கன்னு கேட்குறாங்க. எப்போ செய்தாலும் தப்பு தப்புதான். metoo moment போன்றவற்றால் இன்றைய தலைமுறை எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வார்கள்.
View this post on Instagram
எனக்கு ஒரு பையனை பிடிச்சுருக்கு. அந்த பையனுக்கு என்னை பிடிச்சுருக்கு நாங்க டேட் பண்ணுறோம் அப்படின்னா அது வேற. நான் என்னை மதிக்குறேன். என்னோட தரம் எனக்கு தெரியும். என் திறமை எனக்கு தெரியும் நான் வேலைக்காக படுக்கையை பகிர மாட்டேன். என துணிந்து ஒரு பெண் சொன்னால் casting couch இல்லாமலே போயிடும். அவங்களுக்கு அந்த தன் நம்பிக்கை இருக்கணும். அதை விட்டுட்டு அவங்கள் காம்ப்ரமைஸ் செய்ய விரும்பினால் , ஆண்களும் மனிதர்கள்தான். அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.
நான் ஒரு பெரிய திரைப்பட குடும்பத்தில் இருந்து வரவில்லை. எனக்கு மிகப்பெரிய இயக்குநர் அல்லது தயாரிப்பாளரையெல்லாம் தெரியாது.நான் திறமையையும் கடின உழைப்பையும் நம்பி வந்தேன். பல படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் இன்றளவும் casting couch-ஐ நான் சந்தித்தே கிடையாது. இதுக்கு உங்களுக்கு நிறைய நேரம் எடுக்கலாம். ஆனால் சாத்தியமாகும் “என்றார் ஆண்ட்ரியா.