மேலும் அறிய

Anand Mahindra: குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு ஆனந்த் மகிந்திரா வாழ்த்து

Anand Mahindra: குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு ஆனந்த் மகிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவராக திரௌபதி முர்மு ( Draupadi Murmu) இன்று பதவியேற்று கொண்டார். 

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த மகிந்திரா (Anand Mahindra) சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். பல தன்னம்பிக்கை வீடியோக்கள், முக்கியத்துவம் வாய்ந்தவைகளை பாராட்டி பகிர்வது வழக்கமானது. அந்தவகையில், தற்போது, பதவியேற்றுள்ள திரௌபதி முர்முக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் #MondayMotivation  என்று குறிப்பிட்டு, இதற்காக நீங்கள் எங்கும் தேட வேண்டிய அவசியமில்லை என்று எழுதியுள்ளார். அளவில்லா துணிச்சலுடன், தனது பணியை செய்ய பொறுப்பேற்றுகிறார். அவருக்குள் இருந்த தன்னம்பிக்கையும் தைரியமும், அவரை எல்லா தடைகளையும் கடந்து வாழ்க்கையில் முன்னேற செய்திருக்கிறது. அவருக்கு என் செவ்வணக்கம். நாடு பெருமை கொள்ளும் தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளார். 

திரௌபதி முர்முவுக்கு வழக்கமாக 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவி  பிரமாணம் செய்து வைத்தார்.

  • குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவராக பதவி காலம் முடிவடையவுள்ள வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • இவர்களை தவிர, முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சிகளை சேர்ந்து எம்பிக்கள் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
  • பதவியேற்புக்கு முன்பாக, திரௌபதி முர்மு, அண்ணல் காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு சென்று தேசபிதாகவுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், பதவிகாலம் முடிவடைய உள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் பெண்மணி சவிதா கோவிந்த் ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து, குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்முவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர்.
  • முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று, திரௌபதி முர்மு, வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் விருந்தளித்தார். 
  • 64 வயதான திரெளபதி முர்மு, வியாழன் அன்று, எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வரலாறு படைத்தார். முதல் பழங்குடியினராகவும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெறுமையையும் பெற்றுள்ளார்.
  • முர்முவின் சொந்த ஊரான ஒடிசாவின் ராய்ராங்பூர் வியாழக்கிழமை முதல் திருவிழா கோலம் பூண்டது. அவரது பதவியேற்பு விழாவைக் கொண்டாட அவரது கிராமத்தில் உள்ள மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
  • 2015 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெறுமையும் முர்முவையே சாரும்.
  • ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்மு, பிஜு ஜனதா தளம், பாஜக ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு விகித்தார்.
  • ஒடிசா அரசில் போக்குவரத்து, வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அமைச்சகங்களை கையாண்ட பல்வேறு நிர்வாக அனுபவத்தை கொண்டவர் முர்மு.
  • கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முர்மு, பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவரானார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
Embed widget