Amaran : அமரன் மீது அன்பை பொழியும் ரசிகர்கள்...ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட மேஜர் முகுந்த்
அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் மற்றும் இந்து ரெபெக்கா வருகீஸ் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
அமரன்
அமரன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான இப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி என அனைத்து மொழிகளிலும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலின் போது வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்துவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்து மற்றும் முகுந்தின் கதாபாத்திரங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். திரையரங்குகளில் படம் பார்த்த மக்கள் கலங்கிய கண்களுடன் வீடு திரும்பும் காட்சிகள் சமூக வலைதள முழுவதும் நிறைந்து கிடக்கின்றன.
ஏஐ மூலம் மீண்டும் பிறந்த ஏ.ஐ
இப்படத்தின் மீது இருக்கும் அன்பால் ரசிகர்கள் சிலர் ஏ.ஐ மூலம் வீடியோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அமரன் படத்தில் இந்து மற்றும் முகுந்தை ஏ.ஐ மூலம் உருவாக்கி இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார். ஏ.ஐ மூலம் நடிகைகளில் டீப் ஃபேக் வீடியோக்கள் முன்னதாக பரவியிருக்கின்றன. அதே நேரத்தில் நாம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களை ஏ.ஐ. முலம் சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது. திரைப்படங்களில் மறைந்த பாடகர்களின் குரல்கள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மறைந்த நடிகர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தி கோட் படத்தில் உருவாக்கப்பட்டார்.
Ai Is Dangerous ❌ But Not This Time 🥹@Sai_Pallavi92 @Siva_Kartikeyan @RKFI @Rajkumar_KP pic.twitter.com/Nvh6oneC47
— Rahman (@iamrahman_offl) November 6, 2024
மேஜர் முகுந்தின் இந்த வீடியோ அமரன் படம் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்
அமரன் படக்குழு
அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அமரன் திரைப்படம் உலகளவில் இதுவரை ruu 168 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : Thug Life Release Date : 37 வருட ரசிகர்களின் காத்திருப்பு...டீசருடன் வெளியானது தக் லைஃப் ரிலீஸ் தேதி