Watch video : ஐயோ செம க்யூட்...மனைவி ஆர்த்தி பிறந்தநாளுக்கு எஸ்.கே கொடுத்த இன்ப அதிர்ச்சி
அமரன் படத்தில் மேஜர் முகுந்த் தனது மனைவிக்கு திடீரென்று சர்பரைஸ் கொடுப்பதைப் போல் நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்திக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார். உலகளவில் 250 கோடிக்கும் மேல் அமரன் திரைப்படம் வசூலித்துள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு மொழிகள் கடந்து ரசிகர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளில் வசூல் ரீதியாக சிவகார்த்திகேயனின் படங்கள் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளன. ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற பெரிய ஸ்டார்களின் வரிசையில் சிவகார்த்திகேயன் நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்.கே
சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது முறைப் பெண் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற பெண் குழந்தையும் குகன் தாஸ் என்கிற ஆண் குழந்தையும் உள்ளார்கள். கடந்த ஜூன் மாதம் இந்த தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. திரையில் நகைச்சுவையான நடிகராக இருப்பது போலவே தனிப்பட்ட வாழ்க்கையிலும் எஸ்.கே அதேபோல் ஜாலியா ஒரு நபராக இருகிறார்.
சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி பிறந்தநாளுக்கு அமரன் பட ஸ்டைலில் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தாடி மீசை எல்லாம் எடுத்துவிட்டு ராணுவ உடை அணிந்து சிவகார்த்திகேயன் ஆர்த்தி பின்னால் சென்று நிற்கிறார். முதலில் எஸ்.கேவை பார்க்கும் ஆர்த்தி அடையாளம் தெரியாமல் லேசாக பயந்துபோவதும் பின் சிரிப்பது என அவரது க்யூட்டான ரியாக்ஷன்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது
View this post on Instagram
எஸ்.கே 23
அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ருக்மினி வசந்த் , விக்ராந்த் , வித்யுத் ஜம்வால் , பிஜாய் மேனன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.