Fahadh Faasil in Vikram: ராகவன் இன்ஸ்டின்க்ட் போல் அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!! விக்ரம் புதிய அப்டேட்
அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!! என்று ராஜ்கமல் ஃபில்ம்ஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டால் விக்ரம் படம் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!! என்று ராஜ்கமல் ஃபில்ம்ஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டால் விக்ரம் படம் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் இன்ஸ்டின்க்ட்!!! என்று போலீஸ் உள்ளணர்வு பற்றி கமல் பேசிய டயலாக் இப்போது வரை பிரபல்யம். அதுபோல் ஃபக்த் ஃபாசில் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!! மூலம் ட்ரெண்ட் செட் செய்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி. ஃபகத் ஃபாசில் நடிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தை ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் ஃபக்த் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலை அண்மையில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படக்குழு சற்றுமுன் வெளியிட்ட ட்வீட்டில் அமரின் கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாக ஒற்றை வரியில் வெளிப்படுத்தியுள்ளது. அதில், அமரின் கில்லர் இன்ஸ்டின்க்ட்!!! (கொலையுணர்வை) காண தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இந்த ட்வீட் இன்னும் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
Amar’s Killer Instinct ....
— Raaj Kamal Films International (@RKFI) May 31, 2022
3️⃣ days to go. !!
Book your tickets now in cinemas near you!!! #VikramHitlist #VikramBookNow #VikramFromJune3 pic.twitter.com/28BytwyCZ6
நட்சத்திரப் பட்டாளம்..
விக்ரம் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஆம், உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் சூர்யாவும் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என பெரிய ஸ்டார் காஸ்ட் இருப்பதால் அனைவரின் ரசிகர்களையும் தியேட்டருக்கு படம் இழுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் திரைப்படம் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' பாடலை வைத்து இளைஞர்கள் டேன்ஸ் கவர் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 'போர் கொண்ட சிங்கம்' பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் வெளியாவதால் கமலும் ப்ரோமஷனில் ஈடுபட்டுள்ளார். சாட்டிலைட் தொலைக்காட்சி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரை புரோமோஷன் நீண்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பும் கூட படத்திற்கான புரோமோஷனாகவே கணிக்கப்படுகிறது.