மேலும் அறிய

Amala Paul Weds Jagat Desai: காதலர் ஜகத் தேசாயை மணந்த அமலா பால்.. குவியும் வாழ்த்துகள்..

தன் காதலர் ஜகத் தேசாயை அமலா பால் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார்

தன் காதலர் மற்றும் ட்ராவல் பார்னர் ஜகத் தேசாயை நடிகை அமலா பால் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Amala Paul Weds Jagat Desai: காதலர் ஜகத் தேசாயை மணந்த அமலா பால்.. குவியும் வாழ்த்துகள்..

காதலரை கரம்பிடித்த அமலா பால்

முன்னதாக அமலா பாலின் பிறந்தநாள் அன்று அவரது காதலர் ஜகத் தேசாய் அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்த நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தப் புகைப்படங்களை ஜகத் தேசாய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Amala Paul Weds Jagat Desai: காதலர் ஜகத் தேசாயை மணந்த அமலா பால்.. குவியும் வாழ்த்துகள்..

“இரண்டு ஆத்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகமான  பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்கப்போகிறேன்” என ஜகத் தேசாய் நெகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Jagat Desai (@j_desaii)

கொச்சியில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் சூழ திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமலா பாலின் திரைப்பயணம்

கேரளாவை பூர்விகமாகக் கொண்டவரான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமலா பால்,  தொடர்ந்து கோலிவுட்டில் வெற்றிநாயகியாக வலம் வரத் தொடங்கினார்.

நடிகர் விஜய்யுடன் தலைவா, நடிகர் விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி என பல ஹிட் படங்களில் நடித்த அமலா பால், டோலிவுட் சினிமாவிலும் கால் பதித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முன்னதாக தெய்வத் திருமகள் திரைப்படத்தில் பணியாற்றியபோது  இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் அமலா பாலும் காதலித்து பின் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தனர்.

அதன் பின் அமலா பால் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், அதிகம் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களையும் தன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.

இரண்டாவது திருமணம் 

Amala Paul Weds Jagat Desai: காதலர் ஜகத் தேசாயை மணந்த அமலா பால்.. குவியும் வாழ்த்துகள்..

இந்நிலையில் கடந்த அக்.26ஆம் தேதி அமலா பால் தன் 32ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சூழலில், அமலாவில் கணவர் ஜகத் தேசாய் அவருக்கு ப்ரொபோஸ் செய்தார். மேலும் என் ஜிப்ஸி குயின் எனக்கு ஓகே சொல்லி விட்டார் என்றும் ஜகத் தேசாய் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்று ரசிகர்களுக்கும் சினிமா வட்டாரத்தினருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் அமலா பாலின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget