கர்ப்பம்.. முதல் குழந்தை.. 2-வது குழந்தை.. தொடர் மகிழ்ச்சிக்கு 4 கார்கள் ட்ரீட்டா? வாவ்.. கலக்கும் ஆல்யா சஞ்சீவ் ஜோடி..
கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி திருமணம் ஆன கடந்த 2019 முதல் 2020, 2021 மற்றும் 2022 என தொடர்ந்து 4 ஆண்டுகளில் 4 புதிய கார்களை வாங்கி அசத்தியுள்ளனர்.
ஆல்யா மானசா – சஞ்சீவ் இருவரும் தனது மகன் பிறந்ததையொட்டி புதிய கார்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பமானது முதல் மகன் பிறந்தது வரை இதுவரை 4 கார்களை இவர்கள் வாங்கியுள்ளார்களாம்.
விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி சீரியலில் தன்னுடைய காதலைத் தொடங்கினர் ஆல்யா மற்றும் சஞ்சீவ். ரீல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள், இச்சீரியலின் போதே காதலிக்கத் தொடங்கிய இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியானார்கள்.க்யூட்டான ஜோடிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு புதிய புதிய கார்கள் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகளவில் உள்ளதாம். இந்த சூழலில் தான் இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்த நேரத்தில், தனது மகளுக்குப் பரிசாக ஒரு பென்ஸ் காரை சஞ்சீவ் வாங்கினார்.
இதனைத்தொடர்ந்து காதல் தம்பதிகளான ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஐலா பிறந்தவுடன் ஒவ்வொரு செயலையும் புகைப்படங்களாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுவந்தனர். இந்நிலையில் தான் ஆல்யா கர்ப்பமானது முதல் தற்போது ஆண் குழந்தை பிறந்த நிலையில் புதிய காரை வாங்கியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆல்யாவை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்ததைக்கொண்டாடும் விதமாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் 3 மில்லியன் அதாவது ரூபாய் 30 லட்சத்திற்கு ஒரு கூபர் கார் ஒன்றை வாங்கி ஆல்யாவிற்கு பரிசளித்துள்ளார். இதனையடுத்து சஞ்சீவி ஏற்கெனவே வைத்திருந்த மெர்சிடிஸ் சி கிளாஸ் எனும் காரை தனது சகோதரருக்குப் பரிசாக கொடுத்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
இப்படி கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி திருமணம் ஆன கடந்த 2019 முதல் 2020, 2021 மற்றும் 2022 என தொடர்ந்து 4 ஆண்டுகளில் 4 புதிய கார்களை வாங்கி அசத்தியுள்ளனர். இதனை சோசியல் மீடியாவில் பதிவிட்ட இந்த காதல் தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாரட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில்தான், மனைவி மாசமானா ஒரு கார், குழந்தை பிறந்தா இன்னொரு கார்? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் இன்னும் எத்தனை கார்கள் வாங்கப் போகிறீர்கள் என்றும் கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர். காதல் ஜோடிகளான ஆல்யா மற்றும் சஞ்சீவ் மகள் மற்றும் மகன் பிறந்த தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிவருகின்றனர். தனது மகனுக்கு அர்ஷ் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.