மேலும் அறிய

Raaka : மிரட்டலான கெட்டப்பில் அல்லு அர்ஜூன்.. அட்லீ இயக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு!

Raaka Movie First Look: ஜவான் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுனின் 22வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

2023ம் ஆண்டு வெளியான ஜவான் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுனின் 22வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தீபிகா படுகோனே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இதனை முன்னிட்டு அட்லீ இயக்கம் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது அதன்படி இந்தப் படத்திற்கு ராக்கா என பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கைகளில் கழுகின் நகங்கள் இருப்பது போன்ற வித்தியாசமான தோற்றத்தில் அல்லு அர்ஜுன் தோன்றுகிறார் இந்த தோற்றமானது ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படமானது தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படத்தின் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தில் கஜோல், ஜான்விகபூர், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அல்லு அர்ஜுனின் இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

ராக்கா படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. தமிழில் ராஜா ராணி மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து அங்கிருந்து இந்திக்கு சென்ற அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் அங்கு ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது. இப்படியான நிலையில்தான் புஷ்பா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்த அல்லு அர்ஜுனுடன் அட்லீ கை கோர்த்தார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget