![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amaran Trailer : நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் பட டிரைலர்...படத்தின் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம் ?
![Amaran Trailer : நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் பட டிரைலர்...படத்தின் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா? All you need to Know about Sivakarthikeyan sai pallavi starrer Amaran budget trailer release major mukunth Amaran Trailer : நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் பட டிரைலர்...படத்தின் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/22/251f57317ce49a1f06a4f5d26e9b3f621729590648993572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை மாளை 6 மணிக்கு வெளியாகும் என படதயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவான பட என்று அமரன் படத்தை சொல்லலாம். மொத்தம் 120 கோடி ரூபாயில் இப்படம் உருவாகியுள்ளது.
அமரன் ப்ரோமோஷன்
இப்படத்தை பெரியளவில் வெற்றிபெற செய்யவேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இது தவிர்த்து மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் படத்தின் ப்ரோமோஷன் நடைபெற இருக்கிறது.
அமரன் படம் பற்றி
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்தின் காதல் வாழ்க்கை , அவரது லட்சியம் ஆகியவற்றை படமாக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. இதுவரை பார்க்காத புதுவிதமான சிவகார்த்திகேயனை இப்படத்தில் பார்க்கலாம் என்கிற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்து வருகிறது. படத்திற்காக சிவகார்த்திகேயன் நிஜ துப்பாகியுடன் பயிற்சி எடுத்திருக்கிறார். மேலும் படப்பிடிப்பும் காஷ்மீரில் ராணுவ தளத்திற்கே சென்று நடைபெற்றது. ஆக்ஷன் ரோமான்ஸ் என எல்லாம் இருந்தாலும் அமரன் படம் மிகவும் உணர்ச்சிவசமான ஒரு படமாக இருக்கும் என்றும் படம் முடிந்து ரசிகர்கள் கண் கலங்கியபடிதான் வெளியே வருகிறார்கள் என படத்தில் நடித்த நடிகர்கள் தெரிவித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் அமரன் படத்தைப் பார்த்தபோது தன் பக்கத்தில் ஒரு டிஸூ பாக்ஸ் வைத்து தான் படம் பார்த்ததாக அமரன் ஆடியோ லாஞ்சில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இப்படி அமரன் படத்தின் மீது பல தரப்புகளில் இருந்து பாசிட்டிவான கருத்துகள் வெளியாகி வருகின்றன.
A Hero's Legacy comes to Life! #Amaran trailer marches tomorrow at 6 Pm. #Amarantrailer#Amaran#AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) October 22, 2024
A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran… pic.twitter.com/p9c1jbIO4y
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் அமரன் படம் மற்ற படங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக இருக்கும் என்பது உறுதி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)