Alia Bhatt:அடேங்கப்பா! 163 பேர் இணைந்து 2 ஆயிரம் மணி நேரம் உருவாக்கிய ஆலியா பட்டின் ஆடை!
உலக புகழ்பெற்ற ஃபேஷன் ஷோவான மெட் காலாவில் நடிகை ஆலியா பட் அணிந்து சென்ற ஆடையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம்
மெட் காலா 2024 (Met Gala 2024)
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் நடக்கும் மிகப்பெரிய ஆடை கண்காட்சி நிகழ்ச்சி மெட் காலா. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது . உலகம் முழுவதிலும் இருக்கும் புகழ்பெற்ற பேஷன் டிசைனர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது ஆடைகளை நட்சத்திரங்களை மாடலாக வைத்து தங்களது ஆடைகளை காட்சிப் படுத்துகிறார்கள்.
முதன்மையாக மேற்கு நாடுகளுக்கானதாக இருந்த இந்த நிகழ்ச்சியில் சமீப காலமாக இந்திய திரை பிரபலங்களும் அதிகம் கலந்துகொள்கிறார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் இந்த நிகழ்ச்சியில் வருடந்தோறும் விலைமதிப்பில்லா ஆடைகளை அணிந்து கலந்துகொள்கிறார்கள்.
கண்களை கவர்ந்த ஆலியா பட் ஆடை
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிபிட்ட தலைப்பின் கீழ் இந்த ஆடை கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு Garden Of Time என்கிற தலைப்பில் ஆடைகள் வடிவமைக்கப் பட்டு அதற்கு ஏற்ற வகையில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பூக்கள் , கவரும் வகையிலான நிற வேலைப்பாடுகள் அதிகம் செய்யப் பட்ட ஆடைகள் இந்த ஆண்டு கண்காட்சியில் பார்க்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளர் சப்யஸாச்சி. பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள் தங்களது திருமணத்தில் இந்த நிறுவனத்தின் ஆடைகளையே அணிகிறார்கள். இந்த ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியில் ஆலியா பட் சப்யஸாச்சி தயாரித்த சிறப்பு ஆடை ஒன்றை அணிந்து கலந்துகொண்டுள்ளார்.
163 நபர்கள் சேர்ந்து உருவாக்கிய ஆடை
View this post on Instagram
இந்த ஆடையைப் பற்றி ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காலத்தின் அழகையும் அதன் முடிவின்மையையும் இந்திய பன்பாட்டில் இருந்து பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆடை வடிவமைக்கப் பட்டிருப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடைகளின் எம்பிராய்டரி மற்றும் கல்வேலைப்பாடுகள் ஒவ்வொன்றும் கவனமாகவும், 1920 களில் இருந்த பின்னல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் வானம் , கடல் , நிலம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மொத்தம் 163 நபர்கள் சேர்ந்து கிட்டதட்ட 2000 மணி நேரம் இந்த ஆடையில் வேலை செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படியான ஒரு ஆடையை அணிவதில் தான் பெருமைக் கொள்கிறேன் என்று ஆலியா பட் தெரிவித்துள்ளார்.