Alia Bhatt : சொந்தமாக இந்த பிராண்ட்.. செல்லப்பூனையுடன் கூலாக ப்ரோமோஷன் கொடுத்த அலியா பட்..
தனது சொந்த மகப்பேறு உடைகளுக்கான பிராண்ட் எடாமம்மாவை அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கவுள்ளார் அலியா பட். அவரின் பிராண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் விரைவில் தாய்மையை தழுவ உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அலியா குழந்தைகளுக்கான ஆடை பிராண்டை அறிமுகப்படுத்தினார். தற்போது மகப்பேறு உடைகளையும் அறிமுகப்படுத்த உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் தற்போது தனது சொந்த மகப்பேறு உடைகளுக்கான பிராண்ட் எட்-ஏ-மம்மாவை அக்டோபர் 14ம் தேதி தொடங்கவுள்ளார். அதை வெளியிடுவதற்கு முன்னர் தனது சொந்த பிராண்ட் உடைகளை அவரே அணிந்து தனது செல்ல பூனை எட்வர்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
மகப்பேறு ஆடை பிராண்ட் :
அலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் சில காலங்களுக்கு டேட்டிங் செய்த பிறகு இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இரண்டு மாதங்கள் கழித்து தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார். வழக்கமாக தான் அணியும் ஸ்டைலிஷான உடைகளை அணிவதற்கு மிகவும் சிரமப்படும் அலியா பட் தனது சொந்த மகப்பேறு ஆடை பிராண்டை அறிமுகப்படுத்த நினைத்தார். சில நாட்களுக்கு முன்னர் தான் தனது சொந்த பிராண்ட் எட்-எ-மம்மாவின் ஸ்னீக் பீக் ஒன்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களின் கம்ஃபோர்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு நான் என்றுமே குறை வைத்ததே இல்லை என்கிறார் ஆலியா.
View this post on Instagram
தொடர் வெற்றிப் படங்கள் :
இந்த ஆண்டு அலியா பட்டிற்கு ஒரு மிக சிறந்த ஆண்டாகும். கங்குபாய் கத்தியவாடி, ஆர்ஆர்ஆர் மற்றும் பிரம்மாஸ்திரா என வரிசையாக ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றார் அலியா. ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து Netflix திரைப்படமான Darlings மூலம் தயாரிப்பிலும் இறங்கினார். ஹாலிவுட்டிலும் இறங்கியுள்ள ஆலியா ஹார்ட் ஆஃப் ஸ்டோன் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் ரன்வீர் சிங்குடன் இணைந்து ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் நடித்துள்ளார்.
View this post on Instagram
இந்த ஆண்டு தொடக்கத்தில் டைம் 100 இம்பாக்ட் விருதுகள் வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்த விருது பெறுபவர்களின் ஒருவராக விருது பெற்றார் அலியா பட் என்பது குறிப்பிடத்தக்கது.