“சல்மான் கானுடன் நடிக்க முடியாதது மனதை நொறுக்கியது” - மனம் திறந்த ஆலியா
ஆலியாவைப் பொருத்தவரை சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் அவர் சல்மான் கானுடன் ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்க விரும்பினார்.
ஆலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் கங்குபாய் கத்தியவாடி படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்துக்கு முன்பு ஆலியா பட் சல்மான் கானுடன் 'இன்ஷாஅல்லா' படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், படம் கிடப்பில் போடப்பட்டது. அதுகுறித்து பி.டி.ஐ.க்கு அளித்த பேட்டியில் அதுகுறித்துத் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இன்ஷாஅல்லா திரைப்படம் உருவாகத் தவறியது தனது மனதை நொறுக்குவதாக இருந்ததாக ஆலியா கூறியுள்ளார். மேலும் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் நடிக்க வந்தபோது தனக்கு அச்சமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
View this post on Instagram
ஆலியாவைப் பொருத்தவரை சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் அவர் சல்மான் கானுடன் ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்க விரும்பினார். ஆனால் அதுவரை பன்சாலி மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை புத்தகத்தைப் படித்திருக்கவில்லை கங்குபாயின் கதையையும் அவர் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் ஆலியா கூறுகையில், ‘இதுமாதிரியான படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. கதையைக் கேட்டதும் கத்தியாவாடியாக மாறுவதும் நடிப்பதும் கடினம் என நான் பயந்தேன். ஆனால் பன்சாலிதான் என்னால் அது முடியும் என எனக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் எனக்கு என் மீது கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. ஆனால் ஒரு செயலைச் செய்வது என முடிவெடுத்த பிறகு சந்தேகம் இருக்கக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். படத்தில் எனது பங்கை அதிகரிக்க எனக்காக அவர் கூடுதல் முயற்சி எடுத்தார். இந்தப் படம் எனக்கு வாழ்நாள் வாய்ப்பு” என அவர் கூறியுள்ளார்.
கங்குபாய் கத்தியவாடி படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆலியா தவிர விஜய் ராஸ், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 25 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.