மீண்டும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம்...எமியுடன் களம் இறங்கும் அருண் விஜய்... வெளியானது முதல் கிளிம்ப்ஸ் வீடியோ
ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் "அச்சம் என்பது இல்லையே". நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் எமி ஜாக்சன்.
இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "தலைவி". இப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். அடுத்ததாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய்:
ஏ.எல். விஜய் இயக்கத்தில், ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ் பேனரின் சார்பில் ராஜசேகர் மற்றும் சுவாதி இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "அச்சம் என்பது இல்லையே". இப்படத்தில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடிக்கின்றனர். மலையாள நடிகையான நிமிஷா சஜயன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ படத்தின் தலைப்புடன் விஜயதசமியான நேற்று வெளியானது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் முக்கியமான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் படம் 2023ம் ஆண்டு மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The fearless Journey of our #AchchamEnbathuIllaye begins Grandly in London 💥
— Shri Shiridi Sai Movies (@SSSMOffl) October 5, 2022
Await an Action-packed Thriller in @arunvijayno1 & director Vijay's combination
A @gvprakash Musical 🎶@iamAmyJackson @NimishaSajayan #Rajashekar #Swathi @DoneChannel1 pic.twitter.com/aqNfEQaOZL
மீண்டும் இயக்குனர் விஜய்யுடன் இணையும் எமி :
நீண்ட இடைவேளைக்கு பிறகு எமி ஜாக்சன் மீண்டும் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகிறார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான "மதராசபட்டினம்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அவரை அறிமுகப்படுத்திய இயக்குனரின் படத்தில் மீண்டும் ஒருமுறை நடிப்பதில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் எமி.
Here's the announcement video of #AchchamEnbathuIllaye directed by #Vijay.
— PR Sudharshan ( Casting Director & PR ) (@Pr_sudharshan) October 6, 2022
Starring #ArunVijay, #NimishaSajayan, #AmyJackson, this movie bankrolled by Shri Shiridi Sai Movies has music scored by #GVPrakash. #GVP #ALVijay pic.twitter.com/rXPRqt7uDD
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சினம்:
அருண் விஜய் சமீப காலமாக அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சினம். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, சிறுமியர் கடத்தல் பாலியல் பலாத்காரம் போன்ற அநியாயங்களுக்கு எதிராக எவ்வாறு மக்கள் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாக இது எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.