மேலும் அறிய

Ajith Message: : ரசிகர்கள், ஹேட்டர்ஸ், விமர்சகர்கள்.... "தல" அஜித் ரசிகர்களுக்கு சொன்ன செய்தி என்ன...?

நடிகர் அஜித்குமார் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவுசெய்ததைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அமராவதி மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான அவர் பல்வேறு வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் திரையலகிற்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மக்கள் செய்தித்தொடர்பாளரான சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 30 ஆண்டுகாலம் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு கூறியுள்ள செய்தி. ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலை ரசிகர்கள் என்று மூன்று தரப்பினரும் உள்ளனர். ரசிகர்களின் அன்பை கருணையுடன் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்புகளையும், நடுநிலையாளர்களிடம் இருந்து எந்த பக்கமும் சாராத பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். வாழு..! வாழவிடு..! எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமாரை பொதுவெளியில் காண்பது என்பது மிகவும் அரிதான விஷயம். அவர் சமூகவலைதளங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் ஏதேனும் வெளியானாலே அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பது வழக்கம். இந்த நிலையில், திரையுலகில் தனது 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ள செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடலான “நாங்க வேற மாரி… வேற மாரி..” என்ற பாடல் வெளியானது. இரண்டாண்டுகள் காத்திருந்த ரசிகர்கள் இந்த பாடலை தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் புதிய அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Toyota SUV Cars: கெத்தா.. மாஸா.. வரப்போகுற டொயோட்டோவின் 5 எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Embed widget