CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
சிபிஎஸ்இ 2026-ம் ஆண்டு 12-ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான (Supplementary Exams) அதிகாரப்பூர்வ கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு துணைத்தேர்வு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில், தேர்வு நேரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2026-ம் ஆண்டு 12-ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான (Supplementary Exams) அதிகாரப்பூர்வ கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், தங்களது மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்களும் இந்த துணைத்தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவர். மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in வாயிலாக தேர்வு அட்டவணையை பிடிஎஃப் வடிவத்தில் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு தேதிகள் மற்றும் நேர விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஜூலை 15, 2026 அன்று தொடங்கி ஒரே நாளில் நடைபெறும். அனைத்து முதன்மைப் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒரே கட்டமாக காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணி வரை நடைபெறும். மாணவர்களுக்கு வினாத்தாளைப் படித்துப் பார்ப்பதற்காக, தேர்வு தொடங்குவதற்கு முன்பாக கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
அதேபோல ஓவியம், யோகா உள்ளிட்ட இரண்டாம்கட்டப் பாடங்களுக்கான தேர்வுகள் அதே நாளில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்க உள்ளது.
இந்த ஆண்டு, நாடு முழுவதும் சுமார் 1.22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 12-ம் வகுப்பு துணைத்தேர்வை எழுதுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வை சுமுகமாக நடத்துவதற்காக இந்தியா முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி, தேர்ச்சி பெற மாணவர்கள் கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வுகளில் தனித்தனியாக குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
கால அட்டவணையை பெறுவது எப்படி?
- சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள "Main Website" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- "Latest @ CBSE" என்ற பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள "CBSE Class 12 Supplementary Exam Date Sheet 2026" என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது தேர்வு தேதிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பிடிஎஃப் கோப்பு திரையில் தோன்றும்.
- அதனைப் பதிவிறக்கம்செய்து, பிரிண்ட்அவுட்எடுத்துக்கொள்ளவும்.
அல்லது நேரடியாக https://www.cbse.gov.in/cbsenew/documents/Supplementary_Datesheet_XII_17072026.pdf என்ற இணைப்பில் தேர்வுக்கான முழு அட்டவணை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்மிட் கார்டு எப்போது?
தகுதியான மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தேர்வு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























