மேலும் அறிய

Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்

Cheap EV with 400KM Range Maruti e Vitara: நிஜ உலக பயன்பாட்டிலேயே 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடிய மலிவு விலை மின்சார எஸ்யுவி ஆன, மாருதி இ விட்டாரா குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Cheap EV with 400KM Range Maruti e Vitara: மாருதி இ-விட்டாரா மின்சார கார் மாடல் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

400KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார கார்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு மாடல்களை உற்பத்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. சார்ஜிங் நிலையங்களுக்கு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், நீண்ட தூர பயணங்களுக்கு மின்சார கார்களை சார்ந்து இருக்க முடியுமா? என்பதே பலரது கேள்வியாக உள்ளது. அவர்களது அச்சத்திற்கு தீர்வாக தான், ஒரே சாரிஜில் நீண்ட தூரம் பயணிக்கும் பல கார்கள் கிடைக்கின்றன. சான்றிதழ்களின்படி சில கார்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்பட்டாலும், நிஜ உலக பயன்பாட்டில் அவற்றின் செயல்திறன் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் தான், நிஜ உலக பயன்பாட்டிலேயே 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடிய, மின்சார எஸ்யுவியை மலிவு விலையில் சொந்தமாக்குவதற்கான எளிய நிதி திட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

மாருதி இ-விட்டாரா மின்சார எஸ்யுவி - விலை விவரங்கள்

மாருதி இ-விட்டாரா மின்சார கார் மாடலின் விலை வர்மபானது ரூ.15.99 லட்சத்தில் தொடங்கி ரூ.20.01 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. வாகனத்தின் பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் முறையை தேர்வு செய்தால் இதன் தொடக்க விலை ரூ.10.99 லட்சம் மட்டுமே ஆகும். குறிப்பாக நிஜ உலக பயன்பாட்டில் 400 கிலோ மீட்டர் ரேஞ்சை எதிர்பார்ப்பதால் ஜீடா மாடலை தேர்வு செய்வது நல்லது. சென்னையில் இதன் ஆன் - ரோட் விலையானது 18 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் எக்ஸ் - ஷோரூம் விலை ரூ.17.49 லட்சம், பதிவுக்கட்டணம் சுமார் ரூ.73 ஆயிரம் மற்றும் இத கட்டணங்கள் சுமார் ரூ.17 ஆயிரம் ஆகியவை அடங்கும். நிஜ உலக பயன்பாட்டில் 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் மலிவான மற்றும் நம்பகமான கார்களில் ஒன்றாக மாருதி இ விட்டாரா உள்ளது.

இ-விட்டாரா மின்சார எஸ்யுவி - EMI விவரங்கள்

பொதுவாக வங்கிக் கடன் உதவியுடன் காரை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு, கணிசமான தொகையை கடனமாக பெறுவதே லாபகரமானது. அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம், வங்கிகள் 7.45 வட்டி சதவிகிதத்தில் இருந்து கூட வாகன கடன் வழங்க முன்வருகின்றன. அந்த வகையில் சுமார் ரூ.10.39 லட்சத்தை முன்பணமாக செலுத்தி மாருதி இ விட்டாராவின்  ஜீடா வேரியண்டை தேர்வு செய்தால், மீதமுள்ள சுமார் ரூ.8 லட்சத்திற்கு மட்டுமே நீங்கள் கடனுதவியை அணுக வேண்டி இருக்கும். 

இதையும் படியுங்கள்: Upcoming 7 Seater: ரெண்டு 7 சீட்டர் ஆன் தி வே..! EV & SUV, 600KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை, அம்சங்கள் விவரங்கள்

அந்த வகையில் 8 சதவிகித வட்டியுடன் 7 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடிவு செய்தால், மாதம் நீங்கள் சுமார் 12 ஆயிரத்து 400 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அதன் முடிவில் அசலுடன் கூடுதலாக வட்டியாக மட்டுமே சுமார் ரூ.2.47 லட்சம் செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.21.30 லட்சத்தை செலுத்தி இந்த மின்சார எஸ்யுவியை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒருவேளை முன்தொகையை இன்னும் அதிகமாக செலுத்தினால் உங்களது வட்டி சுமை மற்றும் மாதாந்திர தவணை வெகுவாக குறையக்கூடும்.

இ-விட்டாரா மின்சார எஸ்யுவி - 400KM ரேஞ்ச்

மாருதி இ விட்டாராவின் ஜீடா 61KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிஜ உலக பயன்பாட்டில் நகரப்பகுதியில் 403 கிலோ மீட்டராக இருப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அதிகப்படியான வேகம் காரணமாக இந்த ரேஞ்ச் நெடுஞ்சாலைகளில் சுமார் 338 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதகாவும், இரண்டு சூழலிலும் கலந்து பயன்படுத்தினால் 350 முதல் 440 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.  இதன் ஆல்-வீல் ட்ரைவ் வேரியண்டானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7.4 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது.

இ-விட்டாரா மின்சார எஸ்யுவி - அம்சங்கள், வசதிகள்

ப்ரீமியமான விலைக்கு ஏற்ப காரில் ஏராளமான அம்சங்கள் மற்றும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 10.25 இன்ச்  டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய 10.11 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட், 18 இன்ச் அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டர்ட்/ஸ்டாப் பட்டன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இ-விட்டாரா மின்சார எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய அளவிலான சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்காக ஓட்டுனருக்கான மூட்டுக்கு உட்பட மொத்தம் 7 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், எலெக்ட்ரானிக் ப்ரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ப்ரேக் அசிஸ்ட், 360 டிகிரி வியூ கேமரா, முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள், அடாப்டிவ் ஹைபீம் சிஸ்டம், பல்வேறு அம்சம்ங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS, எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்‌ஷ் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
Embed widget