லைகா போட்ட மாஸ்டர் பிளான்...விடாமுயற்சி படத்திற்கு பான் இந்திய வரவேற்பு
ஏற்கனவே கார் பந்தையத்தில் வெற்றிபெற்று இந்தியளவில் அஜித் கவனமீர்த்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் பான் இந்திய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது

விடாமுயற்சி
மகிழ் திருமேண் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாத நிலையில் இப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. பின் பல காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு இறுதியாக படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது
இப்படியான நிலையில் தான் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. பொங்கல் விடுமுறைக்கு விடாமுயற்சி படம் வெளியாகியிருந்தால் வசூலில் அடித்து நொறுக்கியிருக்கும் என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
லைகா போட்ட மாஸ்டர் பிளான்
தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு முன் அஜித் கார் பந்தையத்தில் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடைபெற்ற மிச்லின் கார் பந்தையத்தில் அஜித் மற்றும் அவரது அணி கலந்துகொண்டது . இந்த பந்தையத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தின் கவனமும் அஜித் மீது விழுந்தது. பலர் அஜித்திற்கு தங்கள் வாழ்த்துகள தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி லைகா படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது.
5️⃣ Million real-time views and counting! 🚀 The VIDAAMUYARCHI Trailer is taking the Internet by storm. Persistence Triumphs! 💪
— Lyca Productions (@LycaProductions) January 16, 2025
🔗 Tamil - https://t.co/zKlPqIavwc
🔗 Telugu - https://t.co/mYt21ihoy0
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #Pattudala… pic.twitter.com/6QNXhSLcpQ
மகிழ் திருமேணியின் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் , ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு , அனிருத்தின் பின்னணி இசை , மிரளவைக்கும் ஆக்ஷன் காட்சி என இந்த டிரைலர் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏத்தியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் அஜித் கார் பந்தையத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் உலகளவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

